பெங்களூரிலும் தீவிர பாதுகாப்பு
பெங்களூர்:
இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றம் தாக்கப்பட்டதையடுத்து, கர்நாடக மாநிலத்தில் பாதுகாப்புதீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கர்நாடக உள்துறை அமைச்சர் மல்லிகார்ஜுன் கார்கே, கர்நாடக டி.ஜி.பியான பாஸ்கர் மற்றும்பெங்களூர் போலீஸ் கமிஷனர் சங்கிலியானா ஆகியோருடன் கிருஷ்ணா ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
பெங்களூர் விமான நிலையம், ரயில் நிலையம், விதான் செளதா, மெஜஸ்டிக் பஸ் நிலையம் மற்றும் மத்திய-மாநிலஅரசு அலுவலகங்கள், அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்கள், பாதுகாப்பு நிறுவனங்கள் ஆகியவற்றில் பாதுகாப்புபலப்படுத்தப்பட்டுள்ளது.
விதான் செளதா அருகே முக்கிய வாகனங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது. மேலும் முறையான பாஸ்வைத்திருப்பவர்கள் மட்டும் விதான் செளதாவுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
ஆந்திராவிலும் பாதுகாப்பு தீவிரம்:
ஆந்திர பிரதேசத்திலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ஆந்திரா என்றாலே மக்கள் போர்க் குழு என்ற நக்ஸல்கள்தான் ஞாபத்திற்கு வருவார்கள். அவர்களின் தீவிரவாதச்செயல்கள் இங்கு அதிகம் இருப்பதால் எப்போதும் இங்கு பாதுகாப்பும் அதிகமாகவே இருக்கும்.
தற்போது நாடாளுமன்றம் தாக்கப்பட்டதை அடுத்து இங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆந்திர சட்டசபை, தலைமைச் செயலகம், சார்மினார், ஹைடெக் சிட்டி, அனைத்து ரயில், பஸ்நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போலீசார் அந்த பகுதிகளை சுற்றி ரோந்துப் பணியில்ஈடுபட்டுள்ளனர்.
ஹைதராபாத் விமான நிலையத்திலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. விமான நிலையத்தினுல் நுழையும்பயணிகளை போலீசார் தீவிரமாகப் பரிசோதனை செய்கின்றனர்.
தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு குறி வைக்கப்பட்டுள்ள நகரங்களில் ஹைதாராபாத்தும் ஒன்று என்பதுகுறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications