கல்லூரி மூடலைக் கண்டித்து மாணவிகள் சாலை மறியல்
சென்னை:
தமிழகம் முழுவதிலும் உள்ள அரசுக் கல்லூரிகள் திடீரென மூடப்பட்டதைக் கண்டித்து சென்னையில் உள்ள காயிதேமில்லத் மகளிர் கலைக் கல்லூரி மாணவிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள் பிரச்சினை தொடர்பாக எழுந்துள்ள பதற்றமான சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு மாநிலத்திலுள்ள அனைத்து அரசு கலை மற்றும் சட்டக் கல்லூரிகளை காலவரையின்றி மூட உத்தரவிட்டது.
இதையடுத்து தமிழகம் முழுவதிலும் உள்ள 60க்கும் மேற்பட்ட அரசுக் கல்லூரிகள் மூடப்பட்டன. சென்னையில்உள்ள மாநிலக் கல்லூரி, நந்தனம் கலைக் கல்லூரி, காயிதே மில்லத் மகளிர் கல்லூரி, ராணி மேரி கல்லூரி, டாக்டர்அம்பேத்கர் கலைக் கல்லூரி, சட்டக் கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி, பாரதி கல்லூரி ஆகியவை மூடப்பட்டன.
திடீரென கல்லூரி மூடப்பட்டதைக் கண்டித்து அண்ணா சாலையில் உள்ள காயிதே மில்லத் மகளிர் கல்லூரிமாணவிகள், ஸ்பென்சர் பிளாஸா அருகே அண்ணா சாலையின் நடுவில் அமர்ந்து சாலை மறியலில் இறங்கினர்.
இதனால் வாகனப் போக்கு நிறைந்த அண்ணா சாலையில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. உடனடியாகவிரைந்து வந்த அண்ணா சாலை போலீசார் மாணவிகளை சமாதானப்படுத்தி கலைந்து போகச்செய்தனர்.
அரசுக் கல்லூரிகளின் விடுதிகளும் மூடப்பட்டு விட்டன. தனியார் கல்லூரிகள் வழக்கம் போல இயங்கின.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி












Click it and Unblock the Notifications