பெர்னாண்டசை நீக்கும் வரை போராட்டம்: எதிர்க் கட்சிகள் உறுதி
டெல்லி:
பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டசை நீக்கும் வரை ஓயமாட்டோம் என்று எதிர்க் கட்சிகள்உறுதியாகக் கூறியுள்ளன.
இப்பிரச்சனை தொடர்பாக மத்திய அரசுக்கு எந்த வகையிலெல்லாம் நெருக்கடிகள் கொடுக்கலாம் என்றுஎதிர்க்கட்சிகள் தற்போது ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன.
இன்றைய (வியாழக்கிழமை) நாடாளுமன்றக் கூட்டம் தொடங்குவதற்கு முன், அங்குள்ள காங்கிரஸ் கட்சிஅலுவலகத்தில் தற்போது எதிர்க் கட்சிகள் கூட்டம் நடந்து வருகிறது.
முன்னதாக நேற்று மாலை ராஜ்யசபா எதிர்க் கட்சித் தலைவர் மன்மோகன் சிங்கின் அறையிலும் இது தொடர்பாகஎதிர்க் கட்சிகளின் கூட்டம் நடந்தது.
அக்கூட்டத்தில் சவப்பெட்டி ஊழல் தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்க பிரதமரை வற்புறுத்துவது எனமுடிவெடுக்கப்பட்டது. இக்கூட்டத்தில் அதிமுக கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளும் நேற்று மாலை கூடி, இப்பிரச்சனையை எவ்வாறுசமாளிப்பது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
தொடர்ந்து நாடாளுமன்ற நடவடிக்கைகள் தடைபட்டு வருவது குறித்து தே.ஜ. கூட்டணி வருத்தம் தெரிவித்தது.


Click it and Unblock the Notifications
