கிருத்திகாவை 50,000 ரூபாய்க்கு வாங்கி மணந்த ராஜகோபால்
சென்னை:
ஹோட்டல் சரவண பவனில் வேலை பார்த்து வந்த கணேசன் என்பவருக்கு ரூ.50,000 கொடுத்து விரட்டி விட்டு,அவரது மனைவி கிருத்திகாவை ஓட்டல் சரவண பவன் அதிபர் ராஜகோபால் கல்யாணம் செய்து கொண்டார் என்றுதெரிய வந்துள்ளது.
ராஜகோபால் விவகாரம் தமிழகத்தையே கலக்கி வருகிறது. ஜீவஜோதியின் கணவர் சாந்தகுமார் கொலைசெய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் இரண்டாவதாக திருமணம் செய்த கிருத்திகாவின் கணவர் நிலை குறித்துகேள்வி எழுந்தது.
கிருத்திகாவின் கணவர் கணேசனும் சரவண பவனில் வேலை பார்த்தவர்தான். கிருத்திகாவும் பின்னர் அதேஹோட்டலில் ஸ்வீட் தயாரிக்கும் பிரிவில் வேலைக்கு சேர்ந்தார். சேர்ந்த சில நாட்களிலேயே ராஜகோபாலின்பார்வையில் விழுந்தார். அவரது பார்வையை உணர்ந்த கிருத்திகாவும் அவரது வலையில் விழுந்தார்.
தனது மனைவி ராஜகோபாலிடம் சரணடைந்து விட்டதை அறிந்த கணேசன், ராஜகோபாலிடம் சென்று தனதுமனைவியை தன்னிடமே ஒப்படைத்து விடுமாறு கோரியுள்ளார். ஆனால் கிருத்திகாவே வர மறுத்து விட்டதால்,ராஜகோபால் ரூ.50,000 கணேசனுக்குக் கொடுத்து, அவரை வேலையிலிருந்து நீக்கி விட்டார்.
இதையடுத்து கணேசன் திண்டிவனத்திற்கு வந்துள்ளார். அங்கு திமுக பிரமுகர் ஒருவர் நடத்தி வரும் சாலையோரமோட்டல் ஒன்றில் தற்போது வேலை பார்த்து வருகிறார்.
கிருத்திகா குறித்து கணேசனிடம் கேட்டபோது,
அதுகுறித்து எதுவும் கூற விரும்பவில்லை. ரூ.50,000 கொடுத்து என்னை விரட்டி விட்டு விட்டார்கள். கிருத்திகாவும்என்னுடன் வாழ விரும்பவில்லை. எனவே அங்கிருந்து பிரிந்து வந்து விட்டேன்.
இப்போது ஜீவஜோதியின் கணவர் சாந்தகுமாரை ராஜகோபாலின் ஆட்கள் கொன்று விட்டார்கள். எனவேஎன்னையும் கொல்ல முயற்சிப்பார்கள். எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசாரிடம்தெரிவித்துள்ளேன் என்றார் கணேசன்.
கிருத்திகாவை மறந்து விட்டு தையல் நாயகி என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்ட கணேசனுக்கு தற்போதுஇரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். அவர்களில் முதல் குழந்தைக்கு கிருத்திகா என்ற பெயரையே சூட்டியுள்ளார்என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications