ஒன்றுகூடி தீவிரவாதத்தை எதிர்ப்போம்: கருணாநிதி
சென்னை:
அரசியல் வேற்றுமைகளை மறந்து அனைவரும் ஒன்றுகூடி தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுவோம் என்று திமுகதலைவர் கருணாநிதி இன்று (வியாழக்கிழமை) கூறினார்.
இன்று காலை டெல்லியில் தீவிரவாதிகளால் நாடாளுமன்றம் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து கருணாநிதிவெளியிட்டுள்ள அறிக்கை:
நாடாளுமன்றத்தை தீவிரவாதிகள் தாக்கியது கடும் கண்டனத்திற்குரியது. இதேபோன்ற தாக்குதல் கடந்தஅக்டோபர் 1ம் தேதி காஷ்மீர் சட்டசபையில் நடந்தது என்பதையும் அதில் 40க்கும் மேற்பட்டவர்கள் இறந்துபோனதையும் நாம் மறந்திருக்க முடியாது.
தீவிரவாதத்தை எதிர்ப்பதில் அரசியல் கட்சியினரிடையே பல்வேறு கருத்துகள் நிலவி வருகின்றன. இந்தத்தாக்குதலை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு இனிமேலாவது வேற்றுமைகளை மறந்துவிட்டு, அனைத்துகட்சிகளும் ஒன்று கூடி தீவிரவாதத்தை எதிர்க்க வேண்டும் என்று அவ்வறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications