புலிகள் தடையை விலக்க இந்திய உதவியை நாடும் இலங்கை தமிழ் கட்சிகள்
கொழும்பு:
விடுதலைப்புலிகள் மீதான தடையை விலக்க இலங்கைக்கு பரிந்துரைக்குமாறு இலங்கையில் உள்ள தமிழ் அரசியல்கட்சிகள் இந்தியாவிடம் கேட்டுக் கொண்டுள்ளன.
இலங்கையில் விடுதலைப்புலிகள் மீதான தடையை விலக்க வேண்டும் என்று இலங்கை அரசிடம் இந்தியாபரிந்துரை செய்ய வேண்டும் என்று தமிழ் ஐக்கிய விடுதலை முண்ணனியின் (டி.யு.எல்.எப்.) செகரட்டரி ஜெனரல்ஆர்.சம்பநாதன், துணைத் தலைவர் வி. ஆனந்தசங்கரி ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இது குறித்துப் பேசுவதற்காக அவர்கள் நேற்று (புதன்கிழமை) இலங்கைக்கான இந்தியத் தூதரான கோபாலகிருஷ்ண காந்தியைச் சந்தித்தனர்.
புதிதாக நாடாளுமன்ற தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த இரண்டு எம்.பி.க்களும் மேலும் கூறுகையில்,
வடக்கு, கிழக்கு இலங்கையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழர் கட்சிகளுக்கு கிடைத்த வரவேற்பைபார்க்கும்போது அங்குள்ள சிங்களர்களும் தமிழர்களை ஆதரிக்கிறார்கள் என்று தெரிகிறது.
தமிழர் கட்சிகளுக்கு நாடாளுமன்றத் தேர்தலில் 15 இடங்கள் கிடைத்துள்ளன. இதற்கு காரணம் நாங்கள் கொடுத்ததேர்தல் வாக்குறுதிகளாகும்.
நாங்கள் மக்களுக்கு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் முக்கியமானவை, விடுதலைப்புலிகள் மீதான தடைகளைவிலக்குதல், ராணுவத்தினரின் கெடுபிடிகளை நிறுத்துவது ஆகியவையாகும் என்று அந்த எம்.பிக்கள் கூறினர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications