மதுரையில் மாணவர்கள் போராட்டத்தில் வன்முறை
மதுரை:
சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதலைக் கண்டித்து மதுரையில் மாணவர்கள்நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதையடுத்து மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.
கடந்த 7ம் தேதி சட்டக்கல்லூரி மாணவர்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதலை கண்டித்து தமிழகம் முழுவதும்கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இன்றும் மதுரையிலும் பல்வேறு இடங்களில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். மதுரையிலிருந்து தேனி போகும்வழியில் உள்ள நாகமலை புதுகோட்டையில் உள்ள கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
இதில் வன்முறை வெடித்தது. கல்வீச்சும், சோடா பாட்டில் வீச்சும் நடந்தது.
போலீசார் மீதும் கல் வீச்சு நடந்தது. இதையடுத்து மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதனால்அப்பகுதியில் போக்குவரத்து 2 மணி நேரம் பாதிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பாக 10 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேப்போல் மூலக்கரை என்ற இடத்தில் சாலைமறியலில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் 2 பேருந்துகளின் மீதுகல்வீச்சு நடத்தினர். இதில் பஸ் கண்ணாடிகள் உடைந்தன. திருப்பாலையிலும் 2 பேருந்துகளின் மீது கல்வீச்சுநடந்தது.
இந் நிலையில் மதுரை நகருக்குள் பல்வேறு கல்லூரி மாணவர்கள் ரயில் நிலையத்திலிருந்து, கலெக்டர்அலுவலகத்துக்கு ஊர்வலமாக சென்றனர். ஊர்வலம் போகும்போது கடைகளின் மீது கல்லெறிந்ததால், கடைகள்மூடப்பட்டன.
பிறகு ஊர்வலம் செல்லும் பாதை குறித்து மாணவர்களுக்கும் போலீசுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால்பதட்டம் நீடித்தது. பிறகு போலீசார் சொன்ன பாதையில் மாணவர்கள் ஊர்வலம் நடத்தினர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications