இந்திய நாடாளுமன்றத்தில் தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல்
டெல்லி:
இந்திய நாடாளுமன்றத்துக்குள் நுழைந்த தீவிரவாதிகள் கடும் தாக்குதல் நடத்தினர்.
வளாகத்துக்குள் நுழைந்தவுடன் அதிலிருந்து இறங்கிய தீவிரவாதிகள் துணை ஜனாபதி ராஜ்யசபாவிற்குள் செல்லபயன்படுத்தும் கேட் எண் 12 அருகே பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த ரிசர்வ் போலீஸ் படையினர் மீது துப்பாக்கியால்சுட்டனர். இதில் அந்த இடத்திலேயே 3 போலீசார் இறந்தனர்.
துப்பாக்கிச் சத்தம் கேட்டவுடனே அங்கு நாடாளுமன்றத்தில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த டெல்லி போலீஸ்படையினர், சி.ஆர்.பி.ஆப். படையினர் ஆகியோர் உடனடியாக தீவிரவாதிகள் இருந்த இடத்தை சுற்றிவளைத்தனர். இரு தரப்பினரும் கடும் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர்.
பாதுகாப்புப் படையினர் மீது கையெறி குண்டுகளை வீசியும் தீவிரவாதிகள் தாக்கினர். இதில் மேலும் 3 போலீசார்இறந்தனர். இதில் ஒருவர் பெண் போலீஸ்.
பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே அரை மணி நேரத்துக்கும் மேலாக மோதல் நடந்தது.இதில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அந்தத் தீவிரவாதிகள் பிரதமர் வாஜ்பாய் வந்து செல்லும் கேட் எண் 5 மற்றும் பெரும்பாலான எம்.பிக்கள் வந்துசெல்லும் கேட் எண் 1 ஆகிய இடங்களிலும் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்தனர். ஆனால், அவர்களை அந்தகேட் அருகே வரக் கூட விடாமல் பாதுகாப்புப் படையினர் உடனடியாக பதில் தாக்குதல் நடத்தினர்.
அதே போல நாடாளுமன்ற அவைக்குள்ளும் நுழைய தீவிரவாதிகள் முயன்றனர். ஆனால், அதையும் பாதுகாப்புப்படையினர் தடுத்துவிட்டனர். இதனால் தீவிரவாதிகளின் திட்டம் பலிக்காமல் போனது. அவர்களை போலீசாரும்,சி.ஆர்.பி.எப். படையினரும் சுற்றி வளைத்து சுட்டுக் கொன்றனர்.
முன்னதாக தங்கள் காரை விட்டு இறங்கிய தீவிரவாதிகள் அந்த இடத்தில் ஒரு டைம்பாம் வெடிகுண்டையும்வைத்துவிட்டுச் சென்றனர். தீவிரவாதிகளுக்கும் போலீசாருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்துகொண்டிருந்தபோது இந்த குண்டு வெடித்தது.
இதில் அங்கிருந்த தோட்டக்காரர் ஒருவர் பலியானார். மேலும் பலர் காயமடைந்தனர். இந்த துப்பாக்கிச் சண்டையில்நாடாளுமன்ற வளாகத்தில் எல்லா பக்கமும் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்தன. இதில் 25 பேர் காயமடைந்தனர்.
பிரதமர், துணை ஜனாதிபதி, எம்.பிக்கள் மீது தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்தனர். ஆனால்,அவர்களின் திட்டம் பலிக்காமல் போய்விட்டது.
கிட்டத்தட்ட 5 கையெறி குண்டுகளையும் தீவிரவாதிகள் வீசித் தாக்குதல் நடத்தினர். 4 தீவிரவாதிகள் அங்கு சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் இரு தீவிரவாதிகள் தப்பியோடினர். அவர்களைத் தேடும் பணி நெடு நேரம் நடந்தது.
கடைசியில் ஒரு தீவிரவாதியின் உடல் பிரதமரின் அலுவலக வாசலில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பிரதமரைத்கொல்ல அவன் திட்டமிட்டிருக்கலாம் என்று தெரிகிறது. ஆனால், பிரதமர் அலுவலகத்தில் பலத்த பாதுகாப்புஇருந்ததால் தப்ப முயன்றுள்ளான். ஆனால், நாடாளுமன்றத்தையே ராணுவம் சுற்றி வளைத்ததால் வேறு வழியின்றிசயனைட் அருந்தி தற்கொலை செய்து கொண்டான்.
அவன் உடல் முழுவதும் வெடி குண்டுகள் கட்டப்பட்டிருந்தன. இதையடுத்து அந்த வெடிகுண்டுகளை செயலிழக்கச்செய்யும் முயற்சி நடந்து வருகிறது. அவனது உடலோடு சேர்ந்து அந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்யத்திட்டமிடப்பட்டுள்ளது.
இன்னொரு தீவிரவாதியின் உடல் நாடாளுமன்றத்தின் மெயின் கேட்டில் கிடந்தது.
இந்தச் சம்பவத்தையடுத்து நாடாளுமன்றத்தை ராணுவம் முற்றுகையிட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications