லக்ஷர்-ஏ-தொய்பா, ஜெய்ஷ்-ஏ-முகம்மத் மீது சந்தேகம்
டெல்லி:
நாடாளுமன்றத்தின் மீது லக்ஷர்-ஏ-தொய்பா அல்லது ஜெய்ஷ்-ஏ-முகம்மத் ஆகியவற்றில் ஏதாவது ஒரு அமைப்புதான் தாக்குதல் நடத்தியிருக்க வேண்டும் என இந்திய உளவுப் பிரிவுகள் கருதுகின்றன.
காஷ்மீரில் சட்டசபை மீது நடத்தப்பட்ட தாக்குதலைப் போலவே தான் இந்தத் தாக்குதலும் உள்ளது. அப்போதும்அரசு வாகனத்தில் நிறைய வெடிகுண்டுகளை ஏற்றிக் கொண்டு ராணுவ உடையில் தான் ஜெய்ஷ்-ஏ-முகம்மத்தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
இந்த இரு அமைப்புகளுமே பாகிஸ்தானில் இருந்து இயங்குபவை. இந்திய நாடாளுமன்றம் தாக்கப்படலாம் எனஉளவுப் பிரிவுகள் ஏற்கனவே எச்சரித்திருந்தார். இதை பிரதமரும் அத்வானியும் கூட வெளிப்படையாகவே கூறிவந்தனர்.
இந் நிலையில் தாக்குதல் நடந்தவுடன் தீவிரவாதிகளின் தொலைபேசிப் பேச்சுகளை இந்திய உளவுப் பிரிவுகள்ஒட்டுக் கேட்டதில் லக்ஷர்-ஏ-தொய்பாவுக்குத் தான் இதில் தொடர்பிருக்க வேண்டும் என்பது தெரியவந்துள்ளது.
4 பேர் கைது:
இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக 4 பேரை டெல்லி போலீசாரும், மத்திய உளவுப் பிரிவினரும் கைதுசெய்துள்ளனர். சம்பவம் நடந்த சில மணி நேரத்திலேயே இவர்களை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்தனர்.
டெல்லியின் தெற்கு, கிழக்கு, வடக்குப் பகுதிகளில் வெவ்வேறு இடங்களில் இவர்கள் சுற்றி வளைக்கப்பட்டனர்.இவர்களின் பெயர் விவரத்தை வெளியிட போலீசார் மறுத்துவிட்டனர்.
தொடர்ந்து நாடு முழுவதும் ரகசிய சோதனை நடவடிக்கைகளில் பாதுகாப்புப் படைகள் ஈடுபட்டுள்ளன.
நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த அனைத்து மாநில முதல்வர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.எல்லைப் பகுதிகளில் ராணுவமும் எல்லைப் பாதுகாப்புப் படையும் தயார் நிலைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications