அமைச்சர்களின் அறைகளில் தஞ்சம் புகுந்த எம்.பிக்கள்
டெல்லி:
தீவிரவாதிகள் தாக்குதலையடுத்து நாடாளுமன்றம் சீல் வைக்கப்பட்டுள்ளது. அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டுபடைகள் குவிக்கப்பட்டு வருகின்றன.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டவுடன் பெரும்பாலான எம்.பிக்கள் 2ம் எண் கேட்வழியாக வெளியேறிக் கொண்டிருந்தனர். அப்போது தான் கேட் எண் 12 அருகே தீவிரவாதிகளின் துப்பாக்கிச் சூடுஆரம்பித்தது. இந்த கேட் வழியாகத் தான் ராஜ்யசபாவின் துணை சபாநாயகரும் துணை ஜனாதிபதியுமானகிருஷ்ணகாந்த் வந்து செல்வது வழக்கம்.
ராஜ்யசபாவின் இந்த கேட் அருகே தான் முதலில் தாக்குதல் தொடங்கியதாகத் தெரிகிறது. சில தீவிரவாதிகள்லோக்சபாவின் அவைக் கூட்டம் நடக்கும் ஹாலுக்குள் நுழைந்துவிட்டதாகத் தெரிகிறது.
இந்த துப்பாக்கிச் சூட்டையடுத்து அமைச்சர்களும் எம்.பிக்களும் அலறியடித்துக் கொண்டு ஓடி வருகின்றனர்.அமைச்சர்களின் அறைகளுக்குள் ஓடினர்.
பல அமைச்சர்களும் எம்பிக்களும் பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டசின் அறைக்குள் நுழைந்து பூட்டிக்கொண்டனர்.
தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடந்து வருகிறது. பாதுகாப்புப் படையினர் நாடாளுமன்றத்தின் அனைத்துப்பகுதிகளையும் சுற்றி வளைத்துத் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
கடந்த 30 நிமிடங்களாக பெரும் துப்பாத்துச் சூடு நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications