தீவிரவாதிகளின் சவாலை ஏற்கிறேன்: வாஜ்பாய்
டெல்லி:
தீவிரவாதிகளின் சவாலை ஏற்பதாகவும், அவர்களின் எந்தவிதமான தாக்குதலையும் முறியடித்துக் காட்டுவோம்எனவும் பிரதமர் வாஜ்பாய் கூறியுள்ளார்.
இத் தாக்குதலில் உயிரிழந்த போலீசாரின் குடும்பத்தினருக்கு தனது இரங்கலைத் தெரிவித்த அவர், தீவிரவாதிகளைஅவர்கள் பாணியிலேயே சந்திக்க இந்தியா தயார் என்றார்.
இன்று பிற்பகலில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான கேபினட் கமிட்டிக் கூட்டத்தையும் வாஜ்பாய் கூட்டியுள்ளார்.இனி தீவிரவாதிகள் மீது மிக பலத்த தாக்குதல்கள் நடத்தப்படும் எனத் தெரிகிறது.
அதே போல பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் தயார் நிலையில் இருக்குமாறு இந்திய ராணுவத்துக்கும் பாதுகாப்புஅமைச்சர் பெர்னாண்டஸ் உத்தரவிட்டுள்ளார். காஷ்மீரின் அக்னூர் பகுதியிலும் 12 இடங்களில் வெடிகுண்டுத்தாக்குதல்கள் நடந்துள்ளன. இதையடுத்து அங்கு கூடுதல் படைகள் விரைந்துள்ளன.
தீவிரவாதிகள் தாக்குதல் நடந்தபோது துணை ஜனாதிபதி கிருஷ்ணகாந்த் ராஜ்யசபாவில் இருந்தார். தீவிரவாதிகள்தாக்குதல் தொடங்கியவுடன் அவரை சுற்றி பல வளையங்களாக நின்று கொண்ட இந்திய-திபெத்திய பார்டர்போலீஸ் படையினர் மிகத் தீவிரமான பாதுகாப்பு அளித்தனர்.
இந்தியா ஹேபிடேட் சென்டர் என்ற அரசு நிறுவனத்தின் அம்பாசிடர் காரில் (எண் டி.எல். 3 சி.ஜே. 1527) தான்தீவிரவாதிகள் நாடாளுமன்றத்துக்குள் வந்துள்ளனர். இந்த காரின் மீது சிவப்பு விளக்கு சைரனையும் சுழலவிட்டுக்கொண்டு வந்துள்ளனர்.
தீவிராவாதிகளிடம் இருந்து சீனாவில் தயாரிக்கப்பட்ட கையெறி குண்டுகளும், ஆர்.டி.எக்ஸ். வெடி குண்டுகளும்மீட்கப்பட்டன.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications