டீக்கடைக்காரருக்கு அடி-உதை: எஸ்.ஐக்கு கடுங்காவல்
சென்னை:
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் டீக்கடைக்காரரை கொடூரமாக அடித்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு ஒருஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
காரைக்குடி பஸ் நிலையம் எதிரே அருள் சாமி என்பவர் டீக்கடை வைத்திருந்தார். 1991ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில்ஒரு நாள் அருள்சாமியின் டீக்கடைக்கு காரைக்குடி போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் குப்புசாமி மற்றும் சிலபோலீஸார் வந்தனர்.
பின்னர் டீக்கடை முன்பு போடப்பட்டிருந்த சேர்கள், நாற்காலி ஆகியவற்றை எடுத்து போலீஸ் ஜீப்பில் போட்டுகாவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர்.
இதனால் அதிர்ச்சியைடந்த அருள் சாமி தனது உறவினர்கள் சிலரை அழைத்துக் கொண்டு காவல் நிலையத்திற்குச்சென்று டீக்கடையிலிருந்து ஏன் பொருட்களை எடுத்து வந்தீர்கள் என்று கேட்டுள்ளார். உடனடியாக அவற்றைத்திருப்பித்தருமாறும் கோரினார்.
ஆனால் அங்கிருந்த போலீசார் அருள் சாமியை உள்ளே அழைத்துச் சென்று அவரை அடித்து உதைத்துள்ளனர்.பின்னர் அவர் அணிந்திருந்த தங்கச் செயின், மோதிரம், ரூ.5,000ரொக்கம், ரூ.44,000க்கான செக் ஆகியவற்றைப்பறித்துக் கொண்டனர்.
படுகாயமடைந்த நிலையில் அருள்சாமி, மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சைக்குப் பின்அவர் காரைக்குடி கோர்ட்டில் சப்-இன்ஸ்பெக்டர் குப்புசாமி மற்றும் 5 போலீசார் மீது வழக்குத் தொடர்ந்தார்.ஆனால் இந்த வழக்கிலிருந்து இவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார் அருள்சாமி. இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதிகற்கபவிநாயகம் நேற்று (புதன்கிழமை) தனது தீர்ப்பை வழங்கினார்.
அதில், அருள்சாமியை காவல் நிலையத்தில் வைத்து போலீசார் அடித்து உதைக்க குப்புசாமிதான் காரணமாகஇருந்திருக்கிறார். எனவே சப்-இன்ஸ்பெக்டர் குப்புசாமிக்கு ஒரு ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்படுகிறது.
மற்ற 5 போலீசாருக்கும் தலா ரூ.25,000 அபராதம் விதிக்கப்படுகிறது என்று தீர்ப்பளித்தார்.
தீர்ப்பைத் தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் குப்புசாமி கைது செய்யப்பட்டு சென்னை மத்திய சிறையில்அடைக்கப்பட்டார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications