முல்லா ஒமர் தலைக்கு ரூ.50 கோடி நிர்ணயம்
வாஷிங்டன்:
தலிபான்களின் தலைவன் முல்லா ஓமரை பிடிக்க துப்பு கொடுப்பவர்களுக்கு அமெரிக்கா 10 மில்லியன் டாலர்(ரூ.50 கோடி) கொடுப்பதாக அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் டொனால்டு ரம்ஸ்பெல்டு கூறியுள்ளார்.
இந்நிலையில் தலிபான்களின் தலைவர் முல்லா ஓமரை பிடிக்க துப்பு தருபவர்களுக்கு ரூ.50 கோடி அளிக்கப்போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
கடந்த 10 நாட்களுக்கு முன் காண்டஹார் நகரையும் கைவிட்ட நிலையில் முல்லா ஒமர் தலைமறைவாகி விட்டார்என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தலிபான்களின் முக்கிய தலைவர்களை பிடிக்க உதவுபவர்களுக்கும் தக்க சன்மானம் வழங்கப்படும் என்றும்அமெரிக்கா கூறியுள்ளது.
ஆயுதமேந்தி போரிடுகிறான் பின்லேடன்
தோரா போரா மலைகளில் அல்-கொய்தா படையினருடன் சேர்ந்து கொண்டு பின் லேடனும் சண்டை போட்டுக்கொண்டிருப்பதாக அமெரிக்க மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பின் லேடன் ஆப்கானிஸ்தானைவிட்டு வெளியேறி பாகிஸ்தானில் ஒளிந்திருப்பதாக நேற்று சில தகவல்கள்வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
