காரை விற்றவரிடம் போலீசார் தீவிர விசாரணை
டெல்லி:
நாடாளுமன்றத்துக்கு நேற்று தீவிரவாதிகள் வந்த காரை விற்றவரிடம் டெல்லி போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.
அடிப்படைக் கட்டமைப்பு மற்றும் முதலீட்டு நிறுவனம் என்ற அமைப்புக்குச் சொந்தமான இந்த வெள்ளை நிறஅம்பாசடர் காரை அவ்வமைப்பு விற்பதற்கு முடிவு செய்து லக்கி மோட்டார்சை அணுகியுள்ளது.
இதையடுத்துதான் தீவிரவாதிகள் கடந்த 11ம் தேதி லக்கி மோட்டார்சை அணுகி, டி.எல். 3 சி.ஜே. 1527 என்ற பதிவுஎண் கொண்ட அந்தக் காரை வாங்கியுள்ளனர்.
டெல்லியில் தங்களுக்கு வீடு எதுவும் இல்லாத காரணத்தால் காஷ்மீர்-பாரமுல்லா முகவரியைக் கொடுத்து, அதுதொடர்பான ஆவணங்களையும் கொடுத்து தீவிரவாதிகள் அந்தக் காரை வாங்கியுள்ளனர்.
பின்னர் அந்தக் காரில் சிவப்பு நிற சுழல் விளக்கையும் சைரனையும் பொறுத்தியுள்ளனர். காரின் முன் கண்ணாடிமீது அரசுக் கார்களைப் போல உள்துறை அமைச்சகத்தின் ஸ்டிக்கரையும் ஒட்டியுள்ளனர்.
காரை வாங்கியது தொடர்பாக அவர்கள் அக்கடையில் கொடுத்துள்ள அனைத்து ஆவணங்களும் தற்போதுகைப்பற்றப்பட்டுள்ளன.
கார் டீலர் கேட்டுக் கொண்டதற்கிணங்க, ஒரு தீவிரவாதியின் புகைப்படம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்தப்புகைப்படத்தில் உள்ளவனும் நேற்று நாடாளுமன்றத்தில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டதைப் போலீசார்கண்டுபிடித்துள்ளனர்.
தற்போது அந்தத் தீவிரவாதிகள் கொடுத்த காஷ்மீர் முகவரிக்கு டெல்லி போலீசார் விரைந்துள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications