சட்டக் கல்லூரி விவகாரம்: நால்வர் குழுவை நியமித்தது ஐகோர்ட்
சென்னை:
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சட்டக் கல்லூரி மாணவர்களால் தேர்வை எழுத முடியுமா என்பதைகண்டறிவதற்காக நான்கு பேர் கொண்ட குழுவை சென்னை உயர்நீதிமன்றம் அமைத்துள்ளது.
சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள் மீதான தாக்குதல் தொடர்பாக வக்கீல் விஜயன் உயர்நீதிமன்றத்தில்மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை வெள்ளிக்கிழமை நடந்தது. தலைமை நீதிபதி சுபாஷன்ரெட்டி, நீதிபதி சிவசுப்ரமணியம் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் மனுவை விசாரித்தது.
அப்போது கல்லூரி விடுதியை உடனடியாக திறக்க வேண்டும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளமாணவர்களும் தேர்வு எழுதுவதற்கு வசதியாக தேர்வை தள்ளி வைக்க வேண்டும், சம்பந்தப்பட்ட போலீசார் மீதுநடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விஜயன் சார்பில் ஆஜரான வக்கீல்கருப்பன் கூறினார்.
இதைக் கேட்ட அரசு வக்கீல் என்.ஆர்.சந்திரன், 15 மாணவர்கள் மட்டுமே மருத்துவமனையில் உள்ளனர்.அவர்களுக்காக 2500 மாணவர்கள் தேர்வு எழுதுவதை நிறுத்த முடியாது. வேண்டுமானால் 15 மாணவர்களும்தனியாக தேர்வு எழுதலாம் என்றார்.
அதைக் கேட்ட தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, உடனடியாக மாணவர்களால் தேர்வு எழுத முடியாது. முதலில்விடுதி திறக்கப்படட்டும். அதன் பிறகு கல்லூரி திறக்கப்படட்டும். இரண்டுமே 24 ம் தேதி திறக்கப்பட வேண்டும்.அதன் பிறகு 26ம் தேதி தேர்வை நடத்தலாம் என்றார்.
பின்னர், சட்டக் கல்லூரி மாணவர்களின் தற்போதைய பிரச்சினைகள், மற்றும் அவர்களது தேர்வு குறித்துக்கண்காணிக்க முன்னாள் டிஜிபி லட்சுமிநாராயணன், சட்டக்கல்லூரி முன்னாள் பேராசிரியர் சந்திரசேகர், வக்கீல்கள்வெங்கடாசலம், வைகை ஆகியோர் அடங்கிய நால்வர் குழு அமைக்கப்படுகிறது. இந்தக் குழு வரும் 20ம் தேதிகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை, அவர்கள் தேர்வு எழுத தகுதியுடன் உள்ளார்களா என்பது குறித்து இந்தக்குழு கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறினார் சுபாஷன் ரெட்டி.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications