காஷ்மீரில் 4 வாகனங்களைத் திருடிய தீவிரவாதிகள்: மக்கள் பீதி
ஸ்ரீநகர்:
காஷ்மீர்-ஸ்ரீநகரில் பல்வேறு இடங்களிலிருந்து தீவிரவாதிகளால் 4 வாகனங்கள் திருடப்பட்டதையடுத்து, அவர்கள்தற்கொலைத் தாக்குதல் நடத்தப் போவதாக மக்கள் பீதியடைந்துள்ளனர்.
இந்நிலையில் ஸ்ரீநகரின் பல்வேறு பகுதிகளில் 4 வாகனங்கள் தற்போது திருடப்பட்டுள்ளன. ஜெய்ஷ்-ஏ-முகமதுமற்றும் லஷ்கர்-ஏ-தொய்பா தீவிரவாதிகளால்தான் இவ்வாகனங்கள் திருடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனால் அவர்கள் தற்கொலைத் தாக்குதலுக்குத் தயாராகிவிட்டனர் என்ற பீதி காஷ்மீர் மக்களிடையேஏற்பட்டுள்ளது. இந்தப் பீதி காஷ்மீரில் உள்ள பாதுகாப்புப் படையினரையும் தொற்றிக் கொண்டுள்ளது.இதையடுத்து காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
காணாமல் போன வாகனங்களைத் தேடும் பணியும் முடுக்கிவிடப்பட்டுள்ளது.
எல்லையில் உஷார் நிலையின் பாகிஸ்தான்:
இந்நிலையில் எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் வீரர்கள் குவிக்கப்பட்டு உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்என்று பாகிஸ்தான் பத்திரிக்கை ஒன்று கூறியுள்ளது.
இந்திய நாடாளுமன்றம் தாக்கப்பட்டதையடுத்து பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷ்ரப் அவசரக் கூட்டத்தை கூட்டி,இந்திய நாடாளுமன்றம் தாக்கப்பட்டதை பற்றி அந்நாட்டு ராணுவ அதிகாரிகளுடன் பேசியுள்ளார்.
இதையடுத்து எல்லைப் பகுதிகளில் அதிக அளவில் பாகிஸ்தான் ராணுவத்தினர் குவிக்கப்பட்டிருப்பதாகவும் "திநியூஸ்" என்ற அப்பத்திரிக்கை கூறியுள்ளது.
ஆனால் பாகிஸ்தான் அதிகாரிகள் இச்செய்தியை மறுத்துள்ளனர். ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில்தான்பாகிஸ்தான் வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளதாகவும், அல்-கொய்தா படையினர் மற்றும் பின்லேடன் பாகிஸ்தானுக்குள்நுழையாமல் தடுக்கவே அவர்கள் அங்கு உஷார் நிலையில் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications