பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்த முன்னாள் அமைச்சர் கைது
கொழும்பு:
இலங்கையின் முன்னாள் அமைச்சர் ஒருவர் வீட்டில் துப்பாக்கிகள், வெடிகுண்டுகள், கையெறி குண்டுகள்வைத்திருந்ததால் கைது செய்யப்பட்டதாக இலங்கை போலீசார் கூறியுள்ளனர்.
பிறகு அவரது வீட்டில் போலீசார் சோதனையிட்டதில் 11 டி-56 ரக வெளிநாட்டுத் துப்பாக்கிகளும், 12 சாதாதுப்பாக்கிகளும், வெடிமருந்துகளும், கையெறிகுண்டுகள் மற்றும் வெடிகுண்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த பொருட்களையெல்லாம் அவர் தேர்தல் வன்முறையாளர்களிடம் கொடுத்ததாக தெரிகிறது. இந்த பொருட்கள்மூலமாக அவர்கள் புத்தளம் மாவட்டத்தில் தேர்தலின்போது வன்முறையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.
அந்த வன்முறையில் ஈடுபட்ட ஒருவனையும் ராணுவத்தினர் பிடித்துள்ளனர். ஐக்கிய தேசிய கட்சியின் கூட்டணியில்உள்ள பலித ரங்க பந்தாராவும் வன்முறைக்கு காரணமாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இவர்கள் இருவரது ஆதரவினால் தான் கலகக்காரர்கள் கலகத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் போலீசார்சந்தேகிக்கின்றனர். ஆனால் இவர்கள் இருவரும் தேர்தலில் வெரும்பான்மையான வாக்குகள் வித்தியாசத்தில்வெற்றிபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
"இலங்கை அமைதிக்கு இந்தியாவின் உதவி தேவை"
இலங்கையில் நடைபெறவுள்ள அமைதிப் பேச்சுவார்த்தைக்கு இந்தியா உதவ வேண்டும் என்று அந்நாட்டுவெளியுறவுத்துறை அமைச்சர் திரோன் பெர்ணான்டோ கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது:
இலங்கையில் அமைதியேற்பட நார்வே குழு நடத்தவிருக்கும் பேச்சுவார்த்தைக்கு இலங்கையின் புதிய அரசுஆதரவளிக்கும்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே வரும் 22, 23, 24 ஆகிய தேதிகளில் இந்தியாவில் சுற்றுப் பயணம்மேற்கொள்கிறார். இலங்கையில் அமைதியேற்படுவதற்கு பிரதமர் வாஜ்பாயிடமும், ஜஸ்வந்த் சிங்குடனும் பேச்சுநடத்தப்படும் என்றார் பெர்னாண்டோ.












Click it and Unblock the Notifications