வெளிநாட்டு இந்தியர்கள் அதிர்ச்சி
நியூயார்க்:
இந்தியாவின் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதல் உள்நாட்டில் மட்டுமின்றி அமெரிக்கா உள்பட வெளிநாடுகளில்வாழும் இந்தியர்களையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்தியன் நேஷனல் ஓவர்சீஸ் காங்கிரஸ் அமைப்பின் தலைவரான மல்ஹோத்ரா கூறுகையில், இந்தியாவைஅச்சுறுத்த நடத்தப்பட்டுள்ள தாக்குதல் இது. ஜனநாயகத்தையும் ஒற்றுமையையும் சீர்குலைத்து இந்த அருமையானதேசத்தை சேதப்படுத்த இத் தாக்குதல் நடந்துள்ளது.
அவர்களை தயார் செய்யும இடத்திலேயே போய் அடித்துக் கொல்வதன் மூலம் தான் தீவிரவாதத்தை ஒழிக்கமுடியும். நம்மைத் தாக்குபவர்களைத் திருப்பித் தாக்க நமக்கு முழு உரிமை உண்டு என்றார்.
பா.ஜ.க. வெளிநாட்டு நண்பர்கள் அமைப்பின் தலைவர் முகுந்த் மோடி கூறுகையில்,
பாகிஸ்தானின் மதப் பள்ளிகளிலும் முகாம்களிலும் தான் தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்போதுதீவிரவாதிகளுக்கு எதிராக உலகம் தழுவிய அளவில் நடந்து வரும் தாக்குதலை நாமும் பயன்படுத்திக் கொண்டுதீவிரவாதத்தை ஒழித்துக் கட்ட வேண்டும்.
இந்தியர்களுக்கான உலக அமைப்பின் தலைவர் தாமஸ் ஆப்ரஹாம் கூறுகையில், தீவிரவாதிகளைத் தேடிப் போய்ஒழிக்க வேண்டும். அவர்கள் வந்து தாக்கும் வரை காத்திருக்கக் கூடாது என்றார்.
மேலும் பல்வேறு இந்திய அமைப்புகளும் இத் தாக்குதலைக் கண்டித்து கருத்துத் தெரிவித்துள்ள அதே நேரத்தில்தீவிரவாதத்தை தீவரமாகவே ஒடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளன.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications