ஆப்கான்-இந்தியா நெருக்கத்தால் பாகிஸ்தான் எரிச்சல்
கொல்கொத்தா:
ஆப்கானிஸ்தானுடன் இந்தியாவுக்கு மீண்டும் நெருக்கம் ஏற்பட்டுள்ளதால் பாகிஸ்தான் எரிச்சல் அடைந்துள்ளது.இதனால் தான் இந்தியா மீது தீவிரவாதிகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது என பிரதமர் வாஜ்பாய் குற்றம்சாட்டினார்.
ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 4 அமைச்சர்கள் அடுத்தடுத்து இந்தியா வந்து சென்றது நமது அண்டை நாட்டைஎரிச்சல்படுத்தியுள்ளது. இந்தியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே மிக நெருக்கமான உறவுவளர்க்கப்படும்.
அவர்களுக்கு பல உதவிகள் செய்துள்ளோம். தொடர்ந்து செய்வோம். அதில் மாற்றமே இருக்காது.
ஆப்கானிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் அப்துல்லா அப்துல்லாவின் குடும்பமே பாதுகாப்புகாகஇந்தியாவில் தான் தங்கி இருந்தது. சமீபத்தில் இந்தியா வந்த அவர் நமது நாட்டை மிகப் பெரிய மனது கொண்டநாடு என வர்ணித்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் விதிமுறைகளின்படி லக்ஷர்-ஏ-தொய்பா மீது நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தானிடம்கோரியுள்ளோம் என்றார்.
பின்னர் ரவீந்திர நாத் தாகூர் நிறுவிய சாந்தி நிகேதனில் நடந்த பட்டமளிப்பு விழாவில் பேசிய வாஜ்பாய், இந்தியாமீது நடந்த தாக்குதலும் அமெரிக்கா மீதான தாக்குதலும் ஒரே மாதிரியானது தான். எல்லா வகைகளிலும்தீவிரவாதத்தை ஒழித்துக் கட்டியாக வேண்டும்.
நமது அண்டை நாட்டில் மதத்தை போதிக்க வேண்டிய மதரஸா பள்ளிகளில் கூட பிரிவினைவாதமும் தீவிரவாதமும்தான் போதிக்கப்படுகிறது. அவை தீவிரவாதத்தின் தொழிற்சாலையாக மாறி வருகின்றன. இது போன்ற ஒருநாட்டிடம் போய் அமைதியையும், கல்வியின் முக்கியத்துவத்தையும் போதிக்க முடியாது. அவர்களை வேறுவகையில்தான் கையாள வேண்டும் என்றார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications