டெல்லி பேராசிரியர் உள்பட மேலும் 10 பேர் கைது
டெல்லி:
நாடாளுமன்றத்தில் நடந்த தாக்குதல் தொடர்பாக தொடர்ந்து பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
டெல்லி போலீசின் சிறப்புப் படையினர் இவர்களைக் கைது செய்துள்ளனர்.
தாக்குதல் நடந்த சில மணி நேரத்திலேயே காஷ்மீருக்கு விரைந்த டெல்லி போலீசின் சிறப்புப் படையினர்ஜம்மூ-காஷ்மீர் போலீசுடன் சேர்ந்து பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள சோபூரில் பல இடங்களில் சோதனை நடத்தி5 பேரைக் கைது செய்தனர்.
இவர்களில் ஒருவரின் பெயர் ஆஷிக் ஹூசைன். இந்தப் பெயரில் தான் டெல்லியில் தாக்குதலுக்குப்பயன்படுத்தப்பட்ட அம்பாசிடர் கார் வாங்கப்பட்டுள்ளது. டெல்லி கரோல் பாக் பகுதியில் உள்ள லக்கி மோட்டர்ஸ்என்ற கார் டீலரிடம் தான் இந்தக் கார் வாங்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட இக் கும்பலை போலீசார் இரவோடு இரவாகவே டெல்லிக்கு கொண்டு வந்துவிட்டனர்.இப்போது இவர்களிடம் மத்திய உளவுப் பிரிவினரும் ராணுவ உளவுப் பிரிவினரும் தங்கள் பாணியில் விசாரணைநடத்திக் கொண்டுள்ளனர்.
டெல்லி பேராசிரியர் கைது:
அதே போல டெல்லி பல்கலைக்கழகத்தின் அரபிக் கல்விப் பிரிவுப் பேராசிரியர் அப்துல் ரஹ்மான் ஜீலானிஎன்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் லண்டனில் வசித்து வரும் பிரிவினைவாத இயக்கத் தலைவர் சையத்நஸீர் ஜீலானியின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.
கைதான போராசிரியருக்கும் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கும் தொடர்பு இருப்பதுகண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் காஷ்மீர் சால்வைகள் விற்கும் நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டார். இவர் தீவிரவாதிகளுக்குஅடைக்கலம் தந்தவர் என்ற அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
6வது தீவிரவாதி எங்கே?:
இதற்கிடையே காரை ஓட்டி வந்த 6வது தீவிரவாதியைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.இவன் நாடாளுமன்றத்தில் நிலவிய குழப்பத்தைப் பயன்படுத்தி தப்பிவிட்டான். டெல்லி முழுவதும் அவனைத்தேடும் பணி நடக்கிறது.
டெல்லியில் நேற்று 2 பேரும் ராஜஸ்தானில் 2 பேரும் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications