லக்ஷர்-ஏ-தொய்பாவின் பெயர் மாற்றம்
டெல்லி:
அமெரிக்கா, இந்தியாவின் நெருக்குதலுக்கு உள்ளாகியுள்ள லக்ஷர்-ஏ-தொய்பா, ஜெய்ஷ்-ஏ-முகம்மத் இரண்டுமேபிரச்சனையில் இருந்து தப்பித்துக் கொள்ள பெயர்களை மாற்றிக் கொண்டுவிட்டதாகத் தெரிகிறது.
காஷ்மீரில் செயல்பட்டு வரும் தீவிரவாத அமைப்புகள் அனைத்தும் சேர்ந்து முத்தாகிதா ஜிகாத் கவுன்சில் என்றஅமைப்பை பாகிஸ்தானில் நடத்தி வருகின்றன. இதில் தான் இப் பெயர் மாற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த அமைப்புகளின் சொத்துக்களை முடக்கவும், தலைவர்களைக் கைது செய்யவும், வங்கிக் கணக்குகளைமுடக்கவும் இந்தியா கோரி வருகிறது. அமெரிக்காவும் இந்த அமைப்புகளை தடை செய்யப்பட்ட இயக்கங்களின்பட்டியலில் சேர்த்துவிட்டது. இந்த அமைப்பினருக்கு அமெரிக்க விசா கிடைக்காது.
இப்போது, பெயரை மாற்றிக் கொண்டு வேறு பெயரில் வங்கிக் கணக்குகளை வைத்துக் கொண்டால் தப்பிவிடலாம்என இந்த அமைப்புகள் கருதுகின்றன.
ஏற்கனவே, பல அமைப்புகள் இது போல பெயர்களை மாற்றிக் கொண்டு தடைகளை மீறி வேறு பெயரில்தொடர்ந்து இயங்கி வருகின்றன. அதே போல இந்த இரு அமைப்புகளும் பெயரை மாற்றிக் கொண்டுவிட்டதாகபாகிஸ்தானிய பத்திரிக்கைகளில் செய்திகள் வந்துள்ளன.
லக்ஷர்-ஏ-தொய்பா அமைப்பின் தலைவாராக இருப்பவன் மெளலான மசூத் அஸார். காஷ்மீர் சிறையில் இருந்தஇவனை விடுவிப்பதற்காகக் தான் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை தீவிரவாதிகள் கடத்திக் கொண்டுஆப்கானிஸ்தான் சென்றனர்.
அமெரிக்க நெருக்குதலுக்குப் பிறகும் பாகிஸ்தானில் தீவிரவாத அமைப்புகள் தொடர்ந்து சுதந்திரமாக செயல்பட்டுவருகின்றன.
லக்ஷர்-ஏ-தொய்பா அமைப்பின் தஸைவன் ஹபிஸ் முகம்மத் பாகிஸ்தான் பத்திரிக்கைக்கு கொடுத்துள்ளபேட்டியில், நாடாளுமன்றத்தைத் தாக்கியது போல இந்தியா மீது மேலும் 6 கடும் தாக்குதல்கள் நடத்தப்படும்என்றான்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications