கருணாநிதியை மீண்டும் கைது செய்ய ஜெ. தீவிரம்
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதியின் மீது மீண்டும் கை வைக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளார் முதல்வராகவுள்ளஜெயலலிதா.
பா.ஜ.கவுடன் நெருக்கத்தை அதிகரித்துக் கொண்டதன் மூலம் திமுகவை தனிமைப்படுத்தும் தனது முயற்சிகளில்ஓரளவு வெற்றியும் பெற்றுவிட்டார் ஜெயலலிதா.
தன மீது கருணாநிதியின் ஆட்சி காலத்தில் போடப்பட்ட வழக்குகளில் இருந்த ஒன்றன் பின் ஒன்றாகவிடுதலையாகிக் கொண்டிருக்கிறார் ஜெ. அடுத்தகட்டமாக கருணாநிதியை சிறையில் தள்ளும் முயற்சிகளில்ஈடுபடுவார் என்று தெரிகிறது.
கடந்தமுறை போல அவசர அவசரமாக கருணாநிதியைக் கைது செய்தது போல் இல்லாமல் இந்த முறை திமுகஆட்சிகால ஊழல்கள் தொடர்பாக ஆதாரங்களைத் திரட்டி வழக்குகள் பதிவு செய்து, பின்னர் அவரைக் கைதுசெய்யத் திட்டமிட்டுள்ளது அரசு.
கருணாநிதி மீதான ஊழல் ஆதாரங்கள் திரட்டப்பட்டு வருவதாக தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் நேற்றுகூறியுள்ளது, விரைவில் திமுகவை ஜெயலலிதா குறி வைப்பார் என்பதைத் தான் காட்டுகிறது.
கடந்த முறை கருணாநிதியை நள்ளிரவில் வீட்டில் நுழைந்து கைது செய்தபோது தமிழகமே கொதித்து எழுந்தது.மத்திய அரசின் நெருக்குதல் காரணமாக அவர் ஜாமீனில் விடுதலையானார். அவருடன் கைதான ஸ்டாலினும்ஜாமீனில் தான் விடப்பட்டார்.
ஆண்டிப்பட்டி இடைத்தேர்தலுக்குப் பின் ஜெயலலிதா முதல்வராகப் பொறுப்பேற்றவுடன் கருணாநிதி கைதுசெய்யப்படலாம் என்று தெரிகிறது
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications