பெரும் விபத்து தவிர்ப்பு: பெங்களூர்-சென்னை ரயில் தப்பிய
பெங்களூர்:
பெங்களூரில் பெரும் விபத்தில் சிக்க இருந்த சென்னை மெயில் ரயிலின் பயணிகள் ஒரு காவலாளியின்சமயோஜிதமான செயலால் உயிர் தப்பினர்.
நேற்று இரவு பெங்களூர் செயிண்ட் ஜான்ஸ் சாலை அருகே உள்ள ரயில் பாலத்தின் கீழ் ஒரு எண்ணெய் லாரியும்இரும்பு ஏற்றிக் கொண்டு வந்த லாரியும் பயங்கர வேகத்தில் மோதிக் கொண்டன. இரு லாரிகளும் மோதிக்கொண்டு ரயில் பாலத்தின் தூண் மீதும் மோதின.
இதில் அந்தத் தூண் நகர்ந்து ரயில் தண்டவாளமும் வளைந்து ஒரு அடிக்கு மேல் இடம் மாறிவிட்டது.
அப்போது அந்த இடத்தை நோக்கி சென்னை மெயில் வந்து கொண்டிருந்தது.
இதைப் பார்த்த அருகாமை கட்டடத்தில் இருந்த வெங்கட்ராமன் என்ற கட்டடக் காவலாளி தண்டவாளத்தில் ஏறிஉயிரையும் பொருட்படுத்தாமல் ரயில் வந்த திசையில் ஓடினார். தனது குல்லாவையும் மப்ளரையும் அசைத்துரயிலை நிறுத்துமாறு டிரைவருக்கு சைகை காட்டினார்.
இதைக் கவனித்த ரயிலின் டிரைவர் அதை மெதுவாக நிறுத்தினார். தண்டவளாம் இடம் மாறிப்போய் இடத்துக்குமிக அருகில் வந்து அந்த ரயில் நின்றது.
ரயில் நிறுத்தப்பட்டிருக்காவிட்டால் பாலத்தில் இருந்து ரயில் கீழே விழுந்து பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும் எனபோலீசார் தெரிவித்தனர்.
லாரியின் டிரைவர்கள் இருவரையும் கைது செய்ய வேண்டும் என ரயில்வேதுறை கேட்டுக் கொண்டுள்ளது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications