தூத்துக்குடி ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
தூத்துக்குடி:
கோவை வெடிகுண்டு வழக்கில் சிறையில் உள்ள அல்-உம்மா தீவிரவாதி பாஷாவை விடுவிக்காவிட்டால்தூத்துக்குடி ரயில் பாதையை குண்டு வைத்துத் தகர்க்கப் போவதாக மர்மக் கடிதம் வந்ததையடுத்து அங்குகண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தூத்துக்குடி ரயில் நிலைய அதிகாரிகளுக்கு வந்த இக் கடிதத்தில், 35 நாட்களுக்குள் பாஷாவை விடுவிக்கவேண்டும். இல்லாவிட்டால் குண்டுகளை வைத்து ரயில் பாதையைத் தகர்ப்போம், இப்படிக்கு அல்-உம்மா எனக்கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து தூக்துக்குடி ரயில் நிலையத்திலும், ரயில் பாதையிலும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் இருந்து பெங்களூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில், சென்னை செல்லும் முத்து நகர் எக்ஸ்பிரஸ்ரயில்களில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பயணிகளின் உடமைகள் மோப்ப நாய்கள், மெட்டல் டிடெக்டர்கள் மூலம் சோதனையிடப்படுகின்றன.
இரவு நேரங்களில் ரயில் பாதை கண்காணிப்பும் அதிகப்படுத்தப்பட்டுள்ளது.
அந்தக் கடிதம் எங்கிருந்து வந்தது என்பதை அறியும் முயற்சிகளும் நடந்து வருகின்றன.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications