ஆப்பிள் லாரியில் ஆயுதங்கள் கடத்தல்
டெல்லி:
டெல்லியில் இருந்து காஷ்மீருக்கு ஆப்பிள் லாரியில் கொண்டுவரப்பட்ட ஏராளமான ஆயுதங்களையும்,கம்ப்யூட்டரையும், 10 லட்சம் ரூபாயையும் ஸ்ரீநகர்போலீசார் நேற்றிரவு கைப்பற்றினர்.
இதனடிப்படையில் செளக்கத்தின் வீட்டை முற்றுகையிட்ட டெல்லி போலீசார், அங்கிருந்த அவருடைய மனைவிஆப்சான் குரு என்ற நவ்ஜோத் சந்துவைக் கைது செய்தனர்.
நாடாளுமன்றத் தாக்குதல் பற்றி தனக்குத் தெரியும் என்று டெல்லி போலீசாரிடம் அனைத்தையும் ஒப்புக்கொண்டஆப்சான், தன் கணவர் செளக்கத்தும் மற்றொரு ஆப்பிள் வியாபாரி முகமது அப்சாலும் ஆப்பிள் ஏற்றிய லாரியில்காஷ்மீர் சென்றிருப்பதாகவும் கூறினார்.
இதையடுத்து காஷ்மீருக்குத் தகவல் பறந்தது. உடனடியாகச் செயல்பட்ட ஸ்ரீநகர் போலீசார், செளகத்தையும்அப்சாலையும் வளைத்துப் பிடித்தனர்.
அவர்களுடைய லாரியில் ஆப்பிள்களுடன் கொண்டு செல்லப்பட்ட ஏராளமான ஆயுதங்கள், ஒரு லேப்-டாப்கம்ப்யூட்டர் மற்றும் ரூ.10 லட்சம் ஆகியவற்றையும் போலீசார் கைப்பற்றினர்.
செளகத்தின் மனைவி ஆப்சான் கடந்த சில நாட்களாகவே நாடாளுமன்றத்திற்கு வந்து சென்றதாகக் கூறப்படுகிறது.நாடாளுமன்ற நடவடிக்கைகள் குறித்தும், அங்கு உள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் இவர்தான்தீவிரவாதிகளுக்கு வரைபடம் போட்டுத் தகவல் கொடுத்துள்ளார்.
இவர் கொடுத்த தகவல்களின் அடிப்படையில்தான் தீவிரவாதிகள் நாடாளுமன்றத்துக்குள் புகுந்து, தாக்குதல்நடத்தியுள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications