பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. சதி அம்பலம்
டெல்லி:
இந்திய நாடாளுமன்றத்தைத் தீவிரவாதிகள் தாக்கியதன் பின்னணியில் பாகிஸ்தான் உளவுத் துறையான ஐ.எஸ்.ஐ.செய்த சதி அம்பலமாகியுள்ளது.
இதற்காக ஐ.எஸ்.ஐ. இவர்களுக்குச் சிறப்புப் பயிற்சிகளையும் அளித்துள்ளது. பல மாதங்களாக நாடாளுமன்றத்தைநோட்டமிட்டு ஒரு வரைபடத்தைத் தயாரித்துள்ளது ஐ.எஸ்.ஐ.
நாடாளுமன்றத்தின் எந்தெந்த கேட்டுகளின் வழியாக வி.ஐ.பிக்கள் வருவார்கள், எங்கெங்கெல்லாம் எவ்வகைப்பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பதையும் அவர்கள் நன்கு கண்காணித்துத்தான் இந்தவரைபடத்தைத் தயாரித்துள்ளனர்.
பின்னர் பல்வேறு குழுக்களை அமைத்த ஐ.எஸ்.ஐ., அவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று தீவிரப்பயிற்சிகளையும் அளித்தது.
இதில் ஒரு குழுவினர்தான் நாடாளுமன்றத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினார்கள். இக்குழுவில் 2 பேர்தற்கொலைப் படையைச் சேர்ந்தவர்கள்.
மற்றொரு குழுவினர் அம்பாசிடர் கார் வாங்கும் பணியில் ஈடுபட்டனர். அந்தக் கார் அரசுக்குச் சொந்தமான காராகஇருக்க வேண்டும் என்றும் அவர்கள் திட்டமிட்டனர்.
இதையடுத்து அரசுக் காரில் இருப்பது போன்ற சைரனோடு கூடிய சிவப்பு விளக்குகளைப் பொருத்தினர்.வெளியுறவுத் துறைக்குச் சொந்தமான கார் என்று நம்பும்படியான ஸ்டிக்கர்களையும் அதில் ஒட்டியுள்ளனர்.
இந்தக் குழுவினர் சம்பவம் நடந்ததற்கு முதல் நாள்தான் (அதாவது கடந்த புதன்கிழமைதான்) அவர்கள்டெல்லிக்கே வந்துள்ளனர் என்பதும் தெரிய வந்துள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications