4 நபர் கமிஷனிடம் சட்டக் கல்லூரி மாணவர்கள் வாக்குமூலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை உயர் நீதிமன்றம் அமைத்த 4 நபர் விசாரணைக் கமிஷனிடம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சட்டக் கல்லூரிமாணவர்கள் வாக்குமூலம் அளித்தனர்.

கடந்த டிசம்பர் 7ம் தேதி நள்ளிரவில் டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்கள் மீது போலீசார் நடத்தியதாக்குதலை பற்றி விசாரிக்க, 4 பேர் அடங்கிய விசாரணைக் குழுவை சென்னை உயர் நீதிமன்றம் அமைத்தது.

இந்தக் குழுவில் முன்னால் டி.ஜி.பி. லட்சுமி நாராயணன், பேராசிரியர் சந்திரசேகர், வக்கீல்கள் வெங்கடாசலபதிமற்றும் வைகை ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

நேற்று சென்னை அரசு பொது மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்களிடம் விசாரித்த அவர்கள்,இன்று சட்டக் கல்லூரி மாணவர்களைச் சந்தித்து நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.

சட்டக் கல்லூரி மாணவர்களும் இது தொடர்பான தங்கள் வாக்குமூலத்தை அந்த நால்வர் குழுவிடம்அளித்துள்ளனர்.

வரும் செவ்வாய்க்கிழமை (டிச.18) சென்னை உயர் நீதிமன்றத்தில் தங்கள் அறிக்கையை இந்த நால்வர் குழுசமர்ப்பிக்கவுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+