மேலும் 3 பேர் கைது
டெல்லி:
நாடாளுமன்றம் மீது தீவிரவாதிகள் தாக்கியதை தொடர்ந்து மேலும் இரண்டு பேரை டெல்லி போலீசாரும் ஒருவரைஸ்ரீநகர் போலீசாரும் கைது செய்துள்ளனர்.
தீவிரவாதிகள் தங்கியிருந்ததாக கருதப்படும் முகர்ஜி நகர், காந்தி விஹாரில் உள்ள வீட்டின் உரிமையாளர் சுபாஷ்மல்ஹோத்ரா மற்றும் வீட்டு புரோக்கர் வீரேந்திர பால் இருவரையும் டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.
வீட்டில் தங்கியிருந்த தீவிரவாதிகளைப்பற்றி வீட்டு உரிமையாளர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க தவறியதால்,இவர்கள் இருவரையும் பிரிவு 188ன் கீழ் கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
சட்டப்படி வீட்டில் தங்கியிருப்பவர்களைப்பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். ஆனால் அந்தத்தீவிரவாதிகள் வந்து ஒரு மாதம் ஆனபிறகும் கூட இதுகுறித்து மல்ஹோத்ரா தெரிவிக்கவில்லை என்றும் போலீசார்கூறினர்.
ஜெய்ஷ்-ஏ-முகமது இயக்கத்தின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஆப்பிள் வியாபாரியான முகமது அப்சால்ஒரு மாணவன் என்றுதான் புரோக்கர் பால் வீட்டு உரிமையாளரிடம் கூறியிருக்கிறான்.
மல்ஹோத்ராவின் வீட்டை இன்று காலை சோதனையிட்ட போலீசார், அங்கிருந்து 35 கிலோ வெடிமருந்துகளையும்கைப்பற்றியுள்ளனர்.
இவர்கள் இரண்டு பேரைத் தவிர, நாடாளுமன்றத் தாக்குதல் தொடர்பாக ஒருவரை ஸ்ரீநகர் போலீசார் கைதுசெய்துள்ளனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications