ஆண்டிப்பட்டியில் போட்டியிடுகிறது மதிமுக
சென்னை:
ஆண்டிப்பட்டி இடைத் தேர்தலில் ஜெயலலிதா போட்டியிட்டால் மதிமுக அவரை எதிர்த்து தனி வேட்பாளரைநிறுத்தும் என்று மதிமுக பொருளாளரும், மத்திய அமைச்சருமான கண்ணப்பன் கூறியுள்ளார்.
இதுகுறித்து கரூரில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்,
நாங்கள் ஜெயலலிதாவை எதிர்த்து தனித்துப் போட்டியிடுவோம். பொது வேட்பாளர் யாரும் நிறுத்தப்படுவாராஎன்பது குறித்து எங்களுக்குத் தெயாது.
பொடோ சட்டத்தில் மதிமுக சார்பில் சொல்லப்பட்ட திருத்தங்கள் பசீலிக்கப்பட்டு சில திருத்தங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. அதுபோலவே பிற கட்சிகள் சொல்லும் திருத்தங்களும் பசீலிக்கப்படும்.
விசாரணையின்றி 6 மாதம் வரை சிறையில் வைக்கலாம் என்ற அம்சத்தை எங்களது யோசனையின் பேரில் 3மாதமாக மத்திய அரசு குறைத்துள்ளது.
பொடோ சட்டத்தை தங்களது அரசியலுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறது காங்கிரஸ் மற்றும்கம்யூனிஸ்ட் கட்சிகள். அது கண்டிக்கத்தக்கது.
பொடோ சட்டத்திற்கு அதிமுக ஆதரவு அளிப்பதன் மூலம் அது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேருமா என்பதுகுறித்து யூகமாக பதிலளிக்க முடியாது என்று கண்ணப்பன் கூறினார்.
-
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications