சட்டக் கல்லூரி மாணவர்கள் 8வது நாளாக உண்ணாவிரதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சட்டக் கல்லூரி மாணவர்கள் மீதான போலீசாரின் தாக்குதலை கண்டித்தும், தாக்குதலுக்குக் காரணமான போலீசாரைகைது செய்யக்கோரியும் சட்டக்கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை) 8வது நாளாகஉண்ணாவிரதப் போராட்டம் இருந்து வருகின்றனர்.

சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சட்டக்கல்லூரி விடுதியில் நுழைந்து போலீசார் மாணவர்களைதாக்கினர். இதில் பல மாணவர்கள் காயமடைந்தனர். காயமடைந்த மாணவர்கள் சென்னை அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் சட்டக்கல்லூரி மாணவ, மாணவிககள் தாக்குதலுக்கு காரணமான போலீசாரை கைது செய்யுமாறுதொடர்ந்து 8வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

தமிழக அரசு இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி அலி முகமது தலைமையிலான ஒருநபர் கமிஷனை அமைத்துள்ளது. மூன்று மாதத்திற்குள் இக்கமிஷன் அறிக்கையளிக்கும்.

இதற்கிடையே சென்னை உயர் நீதிமன்றமும் நால்வர் அடங்கிய குழுவை விசாரணைக்கு அமர்த்தியது. கடந்தஇரண்டு நாட்களாக காயமடைந்த மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களிடம் வாக்குமூலங்களைப் பெற்றுள்ளஇந்தக் குழு, நாளை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யவுள்ளது.

இந்நிலையில் இன்று சட்டக் கல்லூரி மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது.உண்ணாவிரதம் இருந்த பல மாணவர்கள் ஏற்கனவே மயங்கி விழுந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களை எம்.ஜி.ஆர்.அதிமுக தலைவர் திருநாவுக்கரசு சந்தித்து அவர்களுக்குஆதரவு தெரிவிப்பதாகவும் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+