எல்லையில் தாக்குதல் நடத்தினால் போர் வரும்: மார்க்சிஸ்ட் எச்சரிக்கை
டெல்லி:
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியா தாக்குதல் நடத்தினால், அது முழுப் போராக வெடிக்கும்அபாயமுள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய அரசிடம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அங்குள்ள தீவிரவாத முகாம்கள் அழிக்கப்படுவதற்குப் பதிலாக, முழு நேரப் போர் உருவாகும் சூழ்நிலைதான்அதிகரிக்கும் என்று எச்சரித்த மார்க்சிஸ்ட் கட்சி, இதனால் தீவிரவாதச் செயல்களுக்கான இந்தியாவின்ஆதாரங்களெல்லாம் செயலற்றுப் போய்விடும் நிலைமையும் ஏற்படும் என்று கூறியது.
தகுந்த ஆதாரங்களைக் காட்டினால், லஷ்கர்-ஏ-தொய்பா மற்றும் ஜெய்ஸ்-ஏ-முகமது அமைப்புகளின் மீதுநடவடிக்கை எடுப்பதாக பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் கூறியுள்ளார். அதுவரை நாம் பொறுக்க வேண்டும்என்றும் அக்கட்சி கூறியுள்ளது.
மேலும் நாடாளுமன்றத் தாக்குதல் குறித்த ஆதாரங்களை ஐ.நா. மற்றும் உலக நாடுகளிடம் இந்தியா தெளிவாகஎடுத்துக் கூறவேண்டும் என்றும் மத்திய அரசுக்கு மார்க்சிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
மத்திய அரசுக்கு ஆதரவளிக்க காங்கிரஸ் முடிவு:
நாடாளுமன்றத் தாக்குதல் விஷயத்தில் மத்திய அரசு எடுக்கும் எந்த ஒரு ஸ்திரமான, நல்ல முடிவுக்கும்ஆதரவளிக்கப் போவதாக முக்கிய எதிர்க் கட்சியான காங்கிரஸ் கூறியுள்ளது.
இந்த விஷயத்தில் இரு வேறான கொள்கைகள் இருக்க முடியாது, இருக்கவும் கூடாது என்று அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் ஜெய்பால் ரெட்டி கூறியுள்ளார்.
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டருகே உள்ள பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்துவதென்பதுமத்திய அரசின் தனிப்பட்ட முடிவாக இருந்தாலும், அம்முடிவுக்கு காங்கிரஸ் ஆதரவளிக்கும் என்றும் ஜெய்பால்ரெட்டி கூறினார்.












Click it and Unblock the Notifications