பதிலடி குறித்து இந்திய ராணுவம் முடிவெடுக்கும்
டெல்லி:
நாடாளுமன்றத்தின் மீது நடந்த தாக்குதல் இந்தியாவின் மீது நடந்துள்ள தாக்குதல்களிலேயே மிக அதிர்ச்சிகரமானதாக்குதல் என்பதால் இதற்கு பதிலடி கொடுப்பது குறித்து முடிவெடுப்பதை ராணுவத்திடம் விட்டுவிட மத்திய அரசுமுடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
அவரது இல்லத்தில் நடந்த பாதுகாப்பு குறித்த கேபினட் கமிட்டியின் கூட்டத்தில் பேசிய அவர் ராணுவம் எடுக்கும்முடிவை நாம் ஆலோசித்து ஏற்போம் என்றார்.
அமெரிக்கா மீது கோபம்:
நம் நாட்டின் மீது நடந்த தாக்குதலை அமெரிக்கா பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என இந்தியா கருதுகிறது.நியூயார்க்கின் மீது தாக்குதல் நடந்தவுடன் அமெரிக்கா என்ன நடவடிக்கை எடுத்தாலும் அதை ஏற்கத் தயாராகஇருப்பதாக இந்தியா அறிவித்தது.
ஆனால், இப்போது இந்தியா மீது தாக்குதல் நடந்துள்ள நிலையில் அமைதியாக இருக்குமாறு அமெரிக்கா கூறிவருகிறது. தாக்குதல் குறித்து பாகிஸ்தான் விசாரணை நடத்தி வருவதாகவும் கூறி வெறுப்பேற்றி வருகிறது.
அதே போல இந்தியாவின் மீதான தாக்குதலை அமெரிக்கப் பத்திரிக்கைகளும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லைஎன்பதும் குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் காலின் பாவல் கூறுகையில், இந்தியா, பாகிஸ்தான் இடையே மிகபதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. நிலைமை கட்டுக்கடங்காமல் போய்விடுமோ என அஞ்சுகிறேன். ஏதாவதுமோசமான சம்பவம் நடக்கும் முன் இரு தரப்பினருமே அமைதி காக்க வேண்டும் என்றார்.
பாகிஸ்தான் திருந்த வேண்டும் என்ற கருத்து இவர் வாயிலிருந்து வரவில்லை. ஆனால், அமெரிக்கவெளியுறவுத்துறையின் கீழ்மட்ட அதிகாரிகள் தான் பாகிஸ்தானுக்கும் அறிவுரை கூறும் வகையில் அறிக்கைவெளியிட்டு வருகின்றனர்.
இதை இந்தியா தனக்கு இழைக்கப்படும் அநீதியாகக் கருதுகிறது.
அமெரிக்கா இரட்டை வேடம்: ஆர்.எஸ்.எஸ். கண்டனம்
ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் சுதர்ஷன் கூறுகையில்,
தங்கள் மீது தாக்குதல் நடந்தவுடன் உலக நாடுகள் அனைத்தும் தன்னை ஆதரிக்க வேண்டும் என அமெரிக்காவிரும்பியது. ஆப்கானிஸ்தானைத் தாக்கியது.
ஆனால், இந்தியா மட்டும் அமைதியாக இருக்க வேண்டும் என அறிவுரை கூறிக் கொண்டிருக்கிறது. இதுஅமெரிக்காவின் இரட்டை வேடத்தைத் தான் காட்டுகிறது என்றார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications