சீனாவுக்கு ஓடும் முஷாரப்
பெய்ஜிங்:
பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தப்படும் என்ற அச்சம் நிலவுவதால் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ்முஷாரப் சீனாவின் ஆதரவு கோரி அந் நாட்டுக்கு ஓடுகிறார்.
கார்கில் ஊடுருவலைக் கூட சீனாவில் இருந்தவண்ணம் தான் நிறைவேற்றிக் கொண்டிருந்தார் அப்போது ராணுவத்தளபதியாக இருந்த முஷாரப். அந்த ஊடுருவல் குறித்து அப்போதைய பிரதமர் நவாஸ் ஷெரீபுக்கே இருட்டிப்புசெய்திருந்தார் முஷாரப்.
இந்தியா பதிலடித் தாக்குதலைத் தொடங்கியவுடன் சீனாவுக்கு ஓடிய அவர் அந் நாட்டின் உதவி கோரினார்.அங்கிருந்தவண்ணம் ஊடுருவலையும் தீவிரவாதிகள் தாக்குதலையும் ஒருங்கிணைத்தார்.
பெய்ஜிங்கில் இருந்துகொண்டு பாகிஸ்தானில் இருந்த ராணுவ அதிகாரிகளுடன் முஷாரப் தொலைபேசியில்பேசியதை இந்திய உளவுப் பிரிவு இடைமறித்துக் கேட்டதில் இந்த விவரங்கள் தெரியவந்தன. ஒட்டுகேட்கப்பட்டபேச்சையும் கூட இந்தியப் பத்திரிக்கைகளில் வெளியிடச் செய்தது மத்திய அரசு.
இப்போது மீண்டும் இந்தியாவிடமிருந்து பதிலடித் தாக்குதல் கிடைக்கலாம் என அஞ்சும் பர்வேஸ் தனதுநண்பனான சீனாவின் ஆதரவு கோரி அங்கு விரைகிறார்.
இது குறித்து சீன வெளியுறவுத்துறை செய்தியாளர் ஷான் குயியே கூறுகையில்,
இந்திய-பாகிஸ்தான் எல்லையில் நிலைமை பதற்றமாக உள்ளது. இரு நாடுகளும் அமைதியைக் கடைபிடிக்கவேண்டும். பர்வேஸ் முஷாரப் சீனா வருகிறார். அவரது வருகையை மிக முக்கியமானதாகக் கருதுகிறோம்.
தீவிரவாதத்தை எந்த காலத்திலும் சீனா ஆதரிக்காது. இந்தியா மீது நடந்த தாக்குதல் அதிர்ச்சி அளிக்கிறது என்றார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications