300வது விக்கெட்டை நோக்கி கும்ப்ளே
பெங்களூர்:
தன்னுடைய சொந்த ஊரில் 300வது டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்திச் சாதனை புரியப் போகிறார் இந்திய கிரிக்கெட்அணியின் சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளே.
இந்திய-இங்கிலாந்து அணிகளுக்கிடையே மூன்றாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி நாளை (புதன்கிழமை)பெங்களூரில் தொடங்குகிறது.
கடந்த 1998-99ல் டெல்லியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 74 ரன்களை மட்டுமே கொடுத்து அனைத்துபாகிஸ்தான் விக்கெட்டுகளையும் தன் பைக்குள்ளே போட்டுக் கொண்டு கிரிக்கெட் உலகின் புருவங்களை உயரவைத்தவர் கும்ப்ளே.
அகமதாபாத்தில் நடந்த இரண்டாவது டெஸ்ட்டிலேயே அவர் 300வது விக்கெட்டைக் கைப்பற்றுவார் என்று அவர்மட்டுமில்லாமல் அனைவருமே எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.
ஆனால் அவருடைய சொந்த மண்ணான பெங்களூரில்தான் இச்சாதனையை அவர் செய்ய வேண்டும் என்றுதலைவிதி இருந்தால் அதை மாற்ற யாரால் முடியும்?
மொத்தம் 65 மேட்சுகளில் விளையாடி முடித்துள்ள கும்ப்ளேதான் முன்னாள் இந்தியக் கேப்டன் கபில்தேவின்300-விக்கெட் சாதனையை எட்டப் போகும் அடுத்த இந்திய வீரர் (கபில் ஏற்கனவே 434 விக்கெட்டுகளைக்கைப்பற்றி ஓய்வும் பெற்றுவிட்டார்).
ஆனால் 300 விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே இந்திய சுழற்பந்து வீச்சாளர் என்ற பெருமைதான் கும்ப்ளேக்குக்கிடைக்கப் போகிறது.
"என்னுடைய சொந்த மண்ணிலேயே இப்பெருமையை அடையப் போகிறேன் என்பதுஎனக்கு மிகவும்சந்தோஷமளிக்கிறது" என்று கூறுகிறார் 31 வயதாகும் கும்ப்ளே.
தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக கிட்டத்தட்ட ஒரு ஆண்டு காலம் கிரிக்கெட் பக்கமே கும்ப்ளேயால்தலைகாட்ட முடியவில்லை. இல்லையென்றால் எப்போதோ அவர் இச்சாதனையைச் செய்திருப்பார்.
இந்தியா-இங்கிலாந்து பலப் பரீட்சை:
இதற்கிடையே இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே நாளை தொடங்கவுள்ள மூன்றாவது கிரிக்கெட்போட்டி, இரு அணிகளுக்குமே முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாகும்.
இப்போட்டியில் வெற்றி பெற்றால் (குறைந்தபட்சம் டிரா செய்தால்) டெஸ்ட் தொடரைக் கைப்பற்றிய பெருமைஇந்தியாவுக்கு வந்து சேரும்.
ஆனால் இந்தப் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றால்தான் இந்த டெஸ்ட் தொடரையே டிரா செய்துவிட்டோம் என்று அந்த அணி நிம்மதி அடையும்.
இதனால் இரு அணிகளுக்குமிடையே கடும் பலப் பரீட்சை கொண்டதாக இந்த பெங்களூர் டெஸ்ட் அமையும்என்பதில் சந்தேகமில்லை.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications