சிலையை மீண்டும் வைக்காவிட்டால் போராட்டம்: கருணாநிதி
சென்னை:
தமிழ்ப் பெண்களின் பெருமையான கண்ணகி சிலையை மெரீனா கடற்கரையில் மீண்டும் வைக்காவிட்டால் மிகப்பெரும் போராட்டத்தை திமுக நடத்தும் என அக்கட்சியின் தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழர்களின் பெருமையாகவும், தமிழ்ப் பெண்களின் வீரத்தைக் குறிப்பதும், தமிழர் கலாசாரத்தை பிரதிபலிக்கும்விதமான கண்ணகிக்கு கடற்கரையில் வைக்கப்பட்ட சிலை அடாவடித்தனமான முறையில் அகற்றப்பட்டுள்ளது.
சில ஜோதிடர்களின் கருத்தைக் கேட்டு அதன் பேரில் அந்த சிலையை அகற்றி விட்டதாக கூறப்படுகிறது. இதுதமிழர்களுக்கு விடப்பட்டுள்ள பகிரங்க சவால்.
செவ்வாய்க்கிழமைக்குள் மீண்டும் சிலை அதே இடத்தில் வைக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் திமுக மிகப்பெரும் போராட்டத்தில் ஈடுபடும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
இதேபோல, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறுகையில்,
வேண்டுமென்றே லாரியை விட்டு சிலையின் பீடத்தில் மோதி, அது சேதமடைந்து விட்டது என்று காரணம் காட்டிசிலையை எடுத்துச் சென்றுள்ளார்கள்.
தற்போது அந்த இடத்தில் ரோடே போடப்பட்டு விட்டது. ஏற்கனவே கடற்கரைக்குச் செல்ல பல சாலைகள்இருக்கும்போது புதிதாக ஒரு சாலை போடப்பட்ட வேண்டியதன் அவசியம் என்ன என்று கேட்டுள்ளார் வைகோ.-












Click it and Unblock the Notifications