பஞ்சாப்பில் பாகிஸ்தான் உளவுப்படை கும்பல் கைது
டெல்லி:
பஞ்சாப்பில் பாகிஸ்தான் உளவு கும்பலை சேர்ந்த 3 பேர் நேற்று (திங்கள்கிழமை) கைது செய்யப்பட்டனர். இவர்கள்இந்திய ராணுவம் பற்றிய ரகசியங்களை சேகரித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மிர்ஷா முர்சலின்பெக் என்ற தீவிரவாதி கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லி போலீசாரிடம் சிக்கினான்.அவனிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது பஞ்சாப்பில் உள்ள பதான்கோட், ஜோத்பூர் மற்றும் ஜெய்ப்பூர்இடங்களில் பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவு கும்பல் இருப்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, போலீசார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையின்போது, பதான்ககோட்டில் ரகீஸ்சம் சுதீன்,ஜோத்பூரில் அஸ்லம் மற்றும் ஜெய்ப்பூரில் நசீர் ஆகியோர் பிடிபட்டனர். இந்த மூன்று பேரும் சட்டவிரோதமாகஇந்தியாவில் தங்கி இருந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.
பிடிபட்ட உளவு கும்பலிடம் மேலும் விசாரணை செய்ததில், இந்திய ராணுவம் பற்றி ரகசியமாக தகவல்கள்சேகரித்து வந்ததும் தெரிய வந்தது. உளவு கும்பலின் தலைவனாக டெல்லியில் வசித்து வந்த ரகீஸ் முகமதுகான்செயல்பட்டுள்ளான்.
பிடிபட்ட கும்பலிடம் இருந்து ராணுவ ஆவணங்களையும், ரூ.2,000 மதிப்புள்ள கள்ளநோட்டுகளும் பறிமுதல்செய்யப்பட்டன.












Click it and Unblock the Notifications