ஆண்டிப்பட்டியிலிருந்து மருங்காபுரி: தொகுதி மாற ஜெ. திட்டம்
சென்னை:
நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் ஆண்டிப்பட்டியில் போட்டியிட திட்டமிட்டிருந்த ஜெயலலிதா, தற்போதுமருங்காபுரி தொகுதியில் போட்டியிடுவது பற்றி ஆலோசித்து வருகிறார்.
டான்சி வழக்கில் இருந்து விடுதலையாகிவிட்ட ஜெயலலிதா ஆண்டிப்பட்டியில் போட்டியிட்டால் வெற்றிபெறுவாரா என்று அவர் சந்தேகப்படுவதாக தெரிகிறது. காரணம் இத்தொகுதியில் அதிமுக வெற்றிபெற்றபோதெல்லாம் ஏதாவது அனுதாப அலை இருந்துள்ளது.
நடைபெற இருக்கும் இடைத்தேர்தலில் விலைவாசி உயர்வு அலை வீசும் என்று கருதப்படுவதால், ஜெயலலிதாவின்வெற்றிக்கு பாதிப்பு இருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.
இத்தொகுதியில் உளவுத்துறையினர் நடத்திய ஆய்வுகளின் முடிவுகளின்படி, ஜெயலலிதாவுக்கு திருப்திகரமாகஅமையவில்லை என்று தெரிகிறது. விலைவாசி உயர்வால் அதிமுக ஆட்சியின் மீது மக்கள் கடும் அதிருப்தியில்இருப்பதாக உளவுத்துறையினர் கூறியுள்ளனர்.
இதனால் மருங்காபுரி, ஆண்டிப்பட்டி இரண்டு தொகுதிகளிலும் போட்டியிடுவது பற்றி ஜெயலலிதா தரப்பில்ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது. மருங்காபுரி தொகுதி கிராமங்கள் நிறைந்த தொகுதி. மேலும் இங்குபோட்டியிட்டால் வெற்றி நிச்சயம் என்றும் உளவுத் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக சென்னையில் இருந்து ஒரு குழுவும், ஆளும்கட்சி டிவி சார்பில் தனிக் குழுவும் மருங்காபுரிதொகுதி முழுவதும் சென்று கிராம மக்களிடம் விலைவாசி உயர்வால் மாறுதல் ஏற்பட்டுள்ளதா என்று ஆய்வுசெய்து உள்ளனர்.
இம்மாதத்துக்குள் மருங்காபுரி எம்.எல்.ஏ., தனது பதவியை ராஜினாமா செய்தால்தான் மற்ற தொகுதிகளுடன்சேர்ந்து இடைத்தேர்தல் நடத்துவதற்கான வாய்ப்பு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications