சென்னையில் கண்ணகி சிலை அகற்றம்
சென்னை:
சென்னை மெரீனா கடற்கரையில் இருந்த கண்ணகி சிலை அகற்றப்பட்டு, அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது.சிலை இருந்த பீடமும் இடித்து தள்ளப்பட்டு , அங்கு தார் ரோடு போடப்பட்டுள்ளது.
சென்னை மெரீனா கடற்கரையின் முக்கிய இடத்தில், சீரணி அரங்குக்கு எதிரே சாலையோரத்தில் கண்ணகி சிலைவைக்கப்பட்டிருந்தது. திமுக முதல் முறையாக கடந்த 1968ல் ஆட்சிக்கு வந்தபோது, அப்போதைய முதல்வர்சி.என். அண்ணாதுரையால் திறந்து வைக்கப்பட்ட சிலை இது.
சிலப்பதிகாரத்தில் கண்ணகி ஒரு கையில் சிலம்புடன், தலைவிரிகோலமாக, பாண்டிய மன்னனிடம் நீதி கேட்கும்கோலத்தில் இந்த சிலை வடிவமைக்கப்பட்டிருந்தது. சென்னைக்கு சுற்றுலாவுக்கு வரும் பயணிகள் கண்டுகளிக்கும்வகையில் இந்த சிலை இருந்தது.
இந்த சிலை மீது சில நாட்களுக்கு முன்பு லாரி ஒன்று மோதியது. இதனால் சிலையின் பீடம் சிறிதளவுசேதமடைந்தது. இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழக பொதுப்பணித் துறையினர் திடீரெனஇச்சிலையை அகற்றினர்.
கிரேன் மூலம் சங்கிலியால் கட்டி லாரி ஒன்றில் சிலையை ஏற்றிக் கொண்டு சென்றனர். பீடமும் இடித்துதரைமட்டமாக்கப்பட்டு, அந்த இடத்தில் தார் சாலை போடப்பட்டது. இந்த சிலை அரசு அருங்காட்சியகத்துக்குஎடுத்து செல்லப்பட்டு அங்கு வைக்கப்பட்டுள்ளது.
ஜோதிடர் கூறியதால் ஜெ. நடவடிக்கை?
போயஸ் தோட்டத்தில் இருந்து ஜெயலலிதா கோட்டைக்கு செல்லும் வழியில் இந்த சிலை உள்ளது. இதை பார்த்துவிட்டு போவது நல்லது இல்லை என்றும், சிலை எடுத்த கண்ணகியால் பாண்டியன் அரசே பறிபோனது என்றும்அதனால் ஜெயலலிதா கண்ணில் படாத இடத்தில் இந்த சிலை இருப்பதே நல்லது என்றும் ஜோதிடர்கள்தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதன் அடிப்படையில் தான் சிலை மாற்றப்பட்டதாக தெரிகிறது.
இது தொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் கேட்டபோது, சிலையை அகற்றியதில் எவ்விதஉள்நோக்கமும் இல்லை. சேதமடைந்து விட்டதால் இச்சிலையை அகற்றினோம்.
மேலும் அந்த இடம் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் என்பதால் வேறு இடத்தில் சிலையை வைக்கதிட்டமிடப் பட்டுள்ளது.
விரைவில் மெரீனா கடற்கரையிலேயே சீரணி அரங்குக்கு அருகில் பாதசாரிகள் நடப்பதற்கு ஒதுக்கப்பட்டுள்ள பகுதிமூடப்பட்டு, அங்கு இச்சிலை நிறுவப்படும் என்று அந்த அதிகாரிகள் கூறினர்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications