ரூ.1 கோடி கொள்ளை: கருணாநிதியை எதிர்த்துப் போட்டியிட்டவர் கைது
சென்னை:
சென்னையில் திங்கள்கிழமை நகைக் கடையில் நடந்த ரூ. 1 கோடி கொள்ளை தொடர்பாக கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவன் மதுரையைச் சேர்ந்த ரவுடி பக்ருதீன் என்ற சிராஜூதீன் என்பது தெரியவந்துள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக பக்ருதீன் உள்பட 4 பேர் திங்கள்கிழமை இரவே கைது செய்யப்பட்டுவிட்டனர்.
அவர்கள் பிடிபட்ட விவரம்:
சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் பல்சானி நகைக் கடை என்ற கடை உள்ளது. இந்த நகைக் கடைக்குதிங்கள்கிழமை இரவு 7.30 மணிக்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல் நகை வாங்க வந்தவர்கள் போல நடித்தது.
பின்னர் திடீரென கத்தி மற்றும் நாட்டுத் துப்பாக்கிகளைக் காட்டி நகைக் கடை ஊழியர்களை மிரட்டினர்.
அப்போது 3 நகைக் கடை ஊழியர்கள், கொள்ளையர்களைத் தடுக்க முயன்றனர். ஆனால் அவர்களில் சேகர் என்றநகைக் கடை ஊழியரை கொள்ளையர்கள் கத்தியால் வெட்டினர்.
மேலும் நகைக் கடையின் உரிமையாளர் அசோர் பல்சானியையும் தாக்கிவிட்டு
கடையில் இருந்த ரூ. 1 கோடி மதிப்புள்ள நகைகளையும் ரூ.10 ஆயிரம் பணத்தையும் எடுத்துக் கொண்டுஅக்கும்பல் தப்பியது.
முன்னதாக அந்தத் நாட்டுத் துப்பாக்கியை சரியாக இயக்கத் தெரியாமல் ஆட்டியதில் 5 குண்டுகள் கீழே விழுந்தன.
நகைகளை எடுத்துக் கொண்டு இக் கும்பல் ஆளுக்கொரு பக்கமாக தப்பி ஓடினர். இதையடுத்து கடைக் காரர்கள்எழுப்பிய உதவிக் குரலைக் கேட்டு பொதுமக்களில் 5 பேர் விரட்டிச் சென்று ஒருவனைப் பிடித்தனர். அவன் பெயர்பக்ருதீன். மதுரையைச் சேர்ந்த ரவுடி.
இவன் கொடுத்த தகவலின்பேரில் பெரியமேடு பகுதியில் ஒரு விடுதியில் தங்கியிருந்த அலெக்ஸ், ஷகீல் ராஜ்ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
கருணாநிதியை எதிர்த்துப் போட்டியிட்டவர்:
இவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் இன்னொருவனும் பிடிபட்டான். இவன் பெயர் அக்ரம் கான்.அரும்பாக்கத்தைச் சேர்ந்த இவர் கடந்த தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் கருணாநிதியை எதிர்த்துப்போட்டியிட்டவன். இஸ்லாமிய ஜனநாயகக் கட்சி என்ற ஒரு கட்சியை நடத்தி வரும் இவன் அதன் சார்பில் தான்போட்டியிட்டான்.
முன்பு ஜிகாத் கமிட்டி என்ற அமைப்பில் இருந்த இவன் அந்த அமைப்பை தமிழக அரசு தடை செய்தபாது கைதுசெய்யப்பட்டான். தடா கைதியாக மதுரை சிறையில் இருந்தபோது அந்த ஊர் ரவுடிகளுடன் தொடர்பு ஏற்பட்டது.இவர்களின் உதவியுடன் தான் இப்போது இந்தக் கொள்ளையை நடத்தியுள்ளான்.
இந்த 4 பேர் தவிர மதுரையைச் சேர்ந்த ரெக்ஸ், ஆடடோ பாஸ்கர், குண்டுமணி மற்றும் இன்னொருவனுக்கும் இக்கொள்ளையில் தொடர்புள்ளது. இவர்கள் தலைமறைவாகிவிட்டனர். இவர்களைப் பிடிக்க தனிப் படைகள்அமைக்கப்பட்டு மதுரை, காஞ்சிபுரம், ஹைதராபாத், பெங்களூர், வேலூர் ஆகிய இடங்களுக்கு விரைந்துள்ளன.
கைதான கும்பலிடமிருந்து இதுவரை ரூ. 5 லட்சம் மதிப்புள்ள நகைகள் தான் சிக்கியுள்ளன என போலீசார்தெரிவித்தனர்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications