பாகிஸ்தானை ஆதரிக்க சீனா மறுப்பு
பெய்ஜிங்:
பாகிஸ்தானுக்கு நிதியுதவி தர முன்வந்துள்ள சீனா, அதே நேரத்தில் காஷ்மீர் பிரச்சனையில் ஆதரவு தரமறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
பாகிஸ்தானுடன் உள்ள வர்த்தக உறவு தான் இதற்கு மிக முக்கியக் காரணம்.
சீனப் பொருட்கள் மிக அதிக அளவில் பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. ஆனால்,பாகிஸ்தானில் இருந்து பொருள்களை சீனா வாங்குவதில்லை. எனவே, வர்த்தகரீதியில் சீனா தான் பயனடைந்துவருவதாக பாகிஸ்தானில் எதிர்ப்புக் குரல்கள் கேட்கத் தொடங்கியுள்ளன.
இது தவிர ஆப்கானிஸ்தான் போரையொட்டி பாகிஸ்தானுக்கு அமெரிக்கா பெரும் நிதியுதவி செய்து வருகிறது.இதனால் அமெரிக்கா பக்கமாக சாய்ந்து வரும் பாகிஸ்தானை மீண்டும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர சீனாவிரும்புகிறது.
இதன் முதல் கட்டமாக பாகிஸ்தானிடமிருந்து 1 மில்லியன் டன் கோதுமையை இறக்குமதி செய்ய சீனாமுன்வந்துள்ளது. இது தவிர பாகிஸ்தானை வர்த்தகரீதியில் லாபம் அடையச் செய்யும் ஒப்பந்தங்கள் செய்யவும்முன் வந்துள்ளது. நாளை சீனா செல்லும் முஷாரபுடன் இது தொடர்பான ஒப்பந்தங்களில் சீன அதிபர்கையெழுத்திடுவார். கிட்டத்தட்ட 1.5 பில்லியன் டாலர் அளவுக்கு வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளன.
காஷ்மீர் பிரச்சனையில் தலையிட மறுப்பு:
ஆனால், அதே நேரத்தில் காஷ்மீர் பிரச்சனையில் பாகிஸ்தானை ஆதரிக்க சீனா தயாராக இல்லை என அந் நாட்டுவெளியுறவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இது சீனா எடுத்துள்ள புதிய நிலையாகும்.
சமீப காலமாக இந்திய-சீன உறவுகள் சீரடைந்து வருகின்றன. அதை கெடுத்துக் கொள்ள சீனா விரும்பவில்லை.இதுவரை காஷ்மீர் பிரச்சனையில் பாகிஸ்தான் ஆதரவு நிலையை எடுத்திருந்த சீனா ஒரு வழியாய் அதைக் கைவிடமுடிவெடுத்துள்ளது.
இது குறித்து சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஷாங் குயியே கூறுகையில், காஷ்மீர் பிரச்சனையைபேசித் தான் தீர்க்க வேண்டும். இது தொடர்பான சீனாவின் நிலையில் எந்த மாறுதலும் இல்லை என்றார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications