கிரிக்கெட்: தடுமாறுகிறது இங்கிலாந்து
பெங்களூர்:
இந்திய அணிக்கு எதிரான 3வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் துவக்க நாளான இன்று (புதன்கிழமை)இங்கிலாந்து அணி சிறிது தடுமாற்றத்துடனே ஆடி வருகிறது.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணியினர் முதலில் பேட் செய்யத் தீர்மானித்து களத்தில் இறங்கினர்.
ஆனால் ஏழு ஓவர்களில் 21 ரன்கள் எடுத்திருந்போதே தன்னுடைய முதல் விக்கெட்டை அந்த அணி இழந்தது.எட்டே ரன்களை எடுத்திருந்த மார்க்கஸ் டிரஸ்கோத்திக், இந்திய வேகப் பந்து வீச்சாளர் ஜவகல் ஸ்ரீநாத்தின் பந்தைலக்ஷ்மணிடம் கேட்ச் கொடுத்துவிட்டு வெளியேறினார்.
இதைத் தொடர்ந்து மார்க் புட்ச்சர் (27 ரன்கள்) மற்றும் நாஸர் ஹுசைன் (43 ரன்கள்) ஆகியோரது விக்கெட்டுகளும்அடுத்தடுத்து வீழ்ந்தன.
பின்னர் ஆடிய மைக்கேல் வாகனும், மார்க் ராம்பிரகாஷும் நின்று நிதானமாக ஆடி, தங்கள் அணியின் ஸ்கோரைவேகமாக உயர்த்தினர்.
இந்நிலையில் இந்தியாவின் சரண்தீப் சிங்கின் பந்தை அடிக்கத் தவறிய வாகன், கால்களுக்கு இடையே சிக்கியபந்தைத் தன் கைகளால் எடுத்து வேறுபக்கம் போட்டார். இது தவறு என்பதால் வாகனுக்கு (8 பவுண்டரிகளுடன் 64ரன்கள்) அவுட் கொடுத்து அம்பயர் வெளியேற்றினார்.
அடுத்து வந்த ஆண்ட்ரூ பிளின்டாப்பும் (டக் அவுட்) வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினார்.
சிங்கின் பந்தை உயரமாகத் தூக்கி அடித்த அவர் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான சச்சின் டெண்டுல்கர்கைகளில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அப்போது இங்கிலாந்து அணியின் எண்ணிக்கை 206ஆக இருந்தது.
பின்னர் 219 ரன்கள் எடுத்த நிலையில் இங்கிலாந்து அணியின் ஆறாவது விக்கெட்டும் பறிபோனது. ராம்பிரகாஷ்(5 பவுண்டரிகளுடன் 58 ரன்கள்) அடித்த சிங்கின் பந்து ராகுல் டிராவிட்டின் கைகளில் தஞ்சம் புகுந்தது.
இன்றைய ஆட்டநேர இறுதியில் கிரேக் ஒயிட் 30 ரன்களுடனும் ஜேம்ஸ் போஸ்டர் 14 ரன்களுடனும்களத்திலிருந்தனர்.
சொந்த மண்ணான பெங்களூரில் தன்னுடைய 300வது விக்கெட்டைக் கைப்பற்றுவார் என்று அனைவரும்எதிர்பார்த்துக் கொண்டிருந்த இந்திய சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளே, இன்று ஏமாற்றி விட்டார்.நாளைக்காவது அவர் இச்சாதனையைச் செய்வாரா?
ஸ்கோர் விவரம்:
முதல் இன்னிங்ஸ்
இங்கிலாந்து - 255/6 (86 ஓவர்கள்)
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications