சலுகைகள் பறிப்பு: அரசு ஊழியர்கள் அடையாள உண்ணாவிரதம்
சென்னை:
தங்களுக்கு அளிக்கப்பட்டு வந்த சலுகைகள் ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து தமிழக அரசு ஊழியர்கள் இன்று(புதன்கிழமை) ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
கடந்த மாத இறுதியில் தமிழக அரசு திடீரென்று அத்தியாவசியப் பொருட்களின் விலைகளையும் பஸ்கட்டணத்தையும் உயர்த்தியது.
நிதி நெருக்கடியைச் சமாளிப்பதற்காக இவ்வாறு செயல்பட்ட தமிழக அரசு, அரசு ஊழியர்களின் மடியிலும் கைவைத்தது. தமிழக அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட பல்வேறு சலுகைகளும் ரத்து செய்யப்பட்டன.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் அரசு ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைப்பது, ஈட்டு விடுப்பைப் பணமாகமாற்றுவது, ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பொது வைப்பு நிதியிலிருந்து பணம் எடுப்பது போன்ற சலுகைகள் ரத்துசெய்யப்பட்டதையடுத்து, அரசு ஊழியர்கள் மிகவும் கொதிப்படைந்தனர்.
இதைவிட அரசு வாகனங்களை ஓட்டுவது, அரசு அலுவலகங்களில் பாதுகாப்பு ஆட்களை நிறுத்துவதுபோன்றவற்றில் தனியார்களை ஈடுபடுத்துவது என்ற அரசின் முடிவைக் கேட்டு கொந்தளிப்பின் உச்சிக்கே சென்றுவிட்டார்கள் அரசு ஊழியர்கள்.
இதையடுத்து, பல்வேறு போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் அரசு ஊழியர்கள் சார்பில் நடத்தப்பட்டுவருகின்றன.
இந்நிலையில் தங்களுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகள் ரத்து செய்யப்பட்டிருப்பதைக் கண்டித்து, அரசுஊழியர்கள் ஒன்றியம் சார்பில் இன்று ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் சென்னையில் நடந்தது.
இந்த ஒன்றியத்தின் தலைவர் கோ. சூரியமூர்த்தி உண்ணாவிரதத்தைத் தொடங்கி வைத்தார்.
உண்ணாவிரதத்தில் அரசு ஊழியர்கள் ஒன்றியத்தைச் சேர்ந்த பல்வேறு மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications