விமானக் கடத்தல்.. நாடாளுமன்ற தாக்குதல்.. பாகிஸ்தான் ஆயுதம்..
டெல்லி:
நாடாளுமன்றத்தைத் தாக்க வந்து சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதிகளில் ஒருவன் தான் இந்தியன் ஏர்லைன்ஸ்விமானத்தைக் கடத்தியவன் என்று கூறப்படுவதால் அவனது உடலை கடத்தப்பட்ட விமானத்தின் விமானியிடம்காட்டி அடையாளம் தெரிந்து கொள்ள போலீசார் முயன்று வருகின்றனர்.
1999ம் டிசம்பர் மாதம் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் நேபாளத்திலிருந்து காண்டஹாருக்குக் கடத்தப்பட்டது.காஷ்மீர் சிறையில் இருந்த ஜெய்ஷ்-ஏ-முகம்மத் அமைப்பின் தலைவன் மசூத் அஸாரை விடுவிக்கக் கோரி இந்தவிமானம் கடத்தப்பட்டது.
கடத்தல்காரர்களை தட்டிக் கேட்ட ரூபன் கத்யால் என்பவர் விமானத்திலேயே குத்திக் கொல்லப்பட்டார். இவரைக்கொன்ற தீவிரவாதி தான் நாடாளுமன்றத்தைத் தாக்க வந்த கும்பலின் தலைவன் என்று தெரியவந்துள்ளது.
இதையடுத்து கடத்தப்பட்ட விமானத்தின் விமானி மற்றும் ஏர்-ஹோஸ்டஸ்களிடம் இந்தத் தீவிரவாதிகளின்உடலைக் காட்டி அடையாளத்தை உறுதி செய்ய டெல்லி போலீசும் சி.பி.ஐயும் முடிவு செய்துள்ளன.
கொல்லப்பட்ட இந்தத் தீவிரவாதிகளின் உடல்கள் போஸ்ட்மார்ட்டம் செய்யப்பட்டு பாதுகாப்பாகவைக்கப்பட்டுள்ளன. விமான ஊழியர்கள் அடையாளம் காட்டிய பின் இந்த உடல்கள் புதைக்கப்படும்.
நாடாளுமன்றத்தைத் தாக்கியவன் தான் விமானத்தையும் கடத்தியவன் என்பது உறுதியானால், இந்தவிசாரணையில் பாகிஸ்தானின் பங்கு உலகலவில் உறுதியாகிவிடும்.
ஏனெனில், விமானப் பயணிகளை மீட்பதற்காக சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட ஜெய்ஷ்-ஏ-முகம்மத்அமைப்பின் தலைவன் மசூத் அஸார் பாகிஸ்தானில் தான் தங்கியுள்ளான். அவனை மதத் தலைவர் எனவும்தீவிரவாதி இல்லை எனவும் பாகிஸ்தான் கூறி வருகிறது.
பாகிஸ்தான் ஆயுதங்கள்:
டெல்லியில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் கொண்டு வந்த கிரனைட்களில் வாக் நோபல் இன்டஸ்ட்ரீஸ் என்றமுத்திரை பதிக்கப்பட்டுள்ளது. இது சுவீடனைச் சேர்ந்த நிறுவனத்தின் பாகிஸ்தான் கிளை நிறுவனமாகும்.
இதன்மூலம் தாக்குதலில் பாகிஸ்தானுக்குத் தொடர்பிருப்பது மேலும் உறுதியாகியுள்ளது.
இது தவிர கொல்லப்பட்ட தீவிரவாதிகளான முகம்மத், ஹைதர், ஹம்சா, ராஜா, ராணா ஆகிய 5 பேருமேபாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள். அவர்கள் பாகிஸ்தானின் எந்தப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்தும்இந்திய உளவுப் பிரிவுகள் விசாரித்து வருகின்றனர்.
காஷ்மீரில் மேலும் 3 பேர் கைது:
இந் நிலையில் நாடாளுமன்றத்தின் மீது நடந்த தாக்குதல் தொடர்பாக மேலும் 3 பேர் காஷ்மீரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications