இலங்கையில் அமைதி: அஸ்திவாரம் இடுகிறார் ரணில்
கொழும்பு:
இலங்கையில் மீண்டும் அமைதியைக் கொண்டு வருவதற்கான முழு முயற்சியில் புதிய பிரதமர் ரணில்விக்கிரமசிங்கே ஈடுபட்டுள்ளார். இதற்காக விரைவில் மூன்று குழுக்களை நியமிக்கவுள்ளார்.
அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையை தொடங்குவதற்குத் தேவையான அனைத்துநடவடிக்கைகளையும் இரண்டாவது குழு கவனித்துக் கொள்ளும்.
மூன்றாவது குழுவோ தீர்வுக்கான வேறு சில வழிமுறைகளை மேற்கொள்ளவுள்ளது.
இந்த மூன்று குழுக்களிலும் இலங்கையின் மூத்த அமைச்சர்கள் இடம் பெறுவார்கள்.
இதற்கு முன் நடந்த பேச்சுவார்த்தைகள் அனைத்துமே தோல்வியில் முடிந்துவிட்ட காரணத்தால், அவற்றை நன்குஆராய்ந்து பார்த்து புதிய பேச்சுவார்த்தைக்குத் திட்டமிடுவோம் என்றார் ரணில்.
இந்தப் பேச்சுவார்த்தைக்கு நிரந்தரத் தீர்வு காணவேண்டும் என்பது மிகவும் கடினமானது; கரடுமுரடானதும் கூட.படிப்படியாகத்தான் முன்னேற வேண்டும். ஆரம்பத்திலேயே நல்ல தீர்வு ஏற்படும் என்ற பலத்த நம்பிக்கையைக்கைவிட வேண்டும் என்றும் ரணில் கூறியுள்ளார்.
இதுகுறித்து ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்காவுடன் பேச்சு நடத்துவதற்கு முன் வவுனியா மாவட்ட அதிகாரிகளைச்சந்திப்பேன் என்றும் ரணில் கூறினார். இதனால் போர் நடந்து வரும் அப்பகுதிகளின் உண்மை நிலையை என்னால்தெளிவாக அறிய முடியும் என்றார் ரணில்.
"ஆனால் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்குத்தான் அரசு தயாராகிக் கொண்டிருக்கிறது" என்று வெளியுறவுத் துறைஅமைச்சர் டிரோன் பெர்னாண்டோ தெரிவித்தார்.
விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு வந்தால்தான் பேச்சுவார்த்தை நடக்கும் என்று அரசுகூறியதாக வந்த செய்தியை பெர்னாண்டோ மறுத்தார்.
இதற்கிடையே வடகிழக்கு இலங்கையில் வாழும் தமிழர்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் பல்வேறு நலத்திட்டங்களை இலங்கை அரசு விரைவில் அளிக்கவுள்ளது.
இதன் ஒரு கட்டமாக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் உணவு மற்றும் மருந்துப்பொருட்கள் எளிதில் சென்று சேருவதற்கு இலங்கை அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
மேலும் தமிழர்கள் பயணம் செய்வதற்கும் வசிப்பதற்கும் விதிக்கப்பட்டிருந்த சில தடைகளும் விலக்கிக்கொள்ளப்படும் என்றும் இலங்கை அரசு கூறியுள்ளது.
இந்தியாவின் உதவி:
இப்பேச்சுவார்த்தை முயற்சியின் ஒரு பகுதியாக இந்தியாவுக்குச் செல்கிறார் ரணில்.
இந்தியப் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் ஆகியோரைச்சந்தித்து அவர்களுடைய ஆலோசனைகளையும் அவர் கேட்கவுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications