6 லக்ஷர்-ஏ-தொய்பா தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

Subscribe to Oneindia Tamil

காஷ்மீர்:

காஷ்மீரில் ராணுவம் நடத்திய இரு தாக்குதல்களில் லக்ஷர்-ஏ-தொய்பா தீவிரவாதிகள் 6 பேர் கொல்லப்பட்டனர்.நேற்றிரவு இத் தாக்குதல்கள் நடந்தன.

தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் அட்ராசூ என்ற இடத்தில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளை ராணுவம்தேடிப் போய் தாக்கியது. இதையடுத்து தீவிரவாதிகள் திருப்பிச் சுட்டனர். இரு தரப்பினரும் பல மணி நேரம்துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். இறுதியில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அவர்களிடமிருந்து 3 ஏ.கே.-47 துப்பாக்கிகள், 88 குண்டுகள் நிரம்பிய 6 மேகசின்கள், 3 கையெறிகுண்டுகள், டயரிஆகியவை கைப்பற்றப்பட்டன.

அதே போல வட காஷ்மீரில் உள்ள பாரமுல்லா மாவட்டத்தில் பாரம்புரா என்ற இடத்தில் ரோந்து சென்றராணுவத்தினர் மீது தீவிரவாதிகள் சுட்டனர். இதையடுத்து ராணுவம் நடத்திய பதில் தாக்குதலில் பாகிஸ்தானைச்சேர்ந்த அபு முரீத் கஸ்நவி, முகம்மக் ஆசிப், அபு ஹபீப் ஆகிய லக்ஷர் அமைப்பின் தீவிரவாதிகள்கொல்லப்பட்டனர்.

இவர்களிடமிருந்தும் 3 ஏ.கே.-47 ரக துப்பாக்கிகள், 348 குண்டுகள் அடங்கிய 3 மேகசீன்கள், 8 கிரனைட்கள்,வயர்லெஸ் கருவி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+