பஞ்சாபில் இந்திய படைகள் குவிப்பு
ஜம்மூ:
காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் படைகளை குவித்து வருவதற்கு பதிலடியாக, பஞ்சாப் எல்லைப் பகுதியில்இந்தியா தனது படைகளை குவித்துள்ளது.
அதே போல முன்னெச்சரிக்கையாக பாகிஸ்தான் எல்லைப் பகுதி உள்ள பல கிராமங்களை இந்திய ராணுவம் காலிசெய்துள்ளது. இங்கு வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் கனரக ஆயுதங்களால் தாக்கி வருவதையடுத்து இந்தியப் படைகள் பதிலடிதந்து வருகின்றனர்.
இதில் கிராமத்தினர் சிக்கி உயிரிழப்பதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ராணுவம் கூறுகிறது.ஆனால், பாகிஸ்தான் ராணுவத்தின் மீது கடும் தாக்குத்லுக்கு இந்தியா தயாராகி வருவதாகத் தெரிகிறது. இதனால்தான் எல்லையில் உள்ள கிராமங்களை ராணுவம் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது.
ரஜெளரி மாவட்டத்தில் நெளஷேரா என்ற இடத்தில் இந்திய ராணுவம் கொடுத்த பதிலடியில் பாகிஸ்தானின் பலகண்காணிப்புக் கூடாரங்கள் அழிக்கப்பட்டன.
லோக்சபாவில் பேசிய பின் ராஜ்யசபாவில் பேசிய பிரதமர் வாஜ்பாய், கடந்த 13ம் தேதி தாக்குதல் நடந்தவுடன்அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் தொலைபேசியில் என்னைத் தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகள் தான் காரணம் என்பதைத் தெளிவாகஎடுத்துச் சொன்னேன். போரைத் தவிர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். ஆனால், தேவைப்பட்டால் எந்தநடவடிக்கை எடுக்கவும் இந்தியா தயங்காது என்றார்.
இதற்கிடையே நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரை முன் கூட்டியே முடித்துவிடவும் அரசு முடிவுசெய்துள்ளதாகத் தெரிகிறது. பாகிஸ்தான் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படும் நிலையில், அரசுஇந்த முடிவை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதன்படி இந்தக் கூட்டத் தொடர் இன்றே நிறைவடைந்துவிடும். முன்னதாக 21ம் தேதி வரை கூட்டத் தொடர்நடப்பதாக இருந்தது.
சபாநாயகர் பாலயோகி இது தொடர்பாக அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் பேசி இம் முடிவை எடுத்தார். போர்மூளும் அபாயம் அதிகரித்துள்ள நிலையில் பிரதமர் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் நாடாளுமன்றத்துக்கு வந்துசெல்ல அடிக்கடி வெளியில் வருவதை ராணுவம் விரும்பவில்லை என்று தெரிகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications