எல்லையில் பாக். சிறப்புப் படை: போர் பயத்தில் காஷ்மீர்
ஜம்மூ:
இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் மூளும் என பெரும்பான்மையான காஷ்மீர் மக்கள் கருதுகின்றனர்.
பாகிஸ்தானின் சிறப்புப் படைகள் குவிப்பு:
இந் நிலையில் எல்லைப் பகுதியில் சிறப்பு அதிரடிப் படைகளையும் (எஸ்.எஸ்.ஜி.) பாகிஸ்தான் நிறுத்தி வருகிறது.ஜம்மூ-பூஞ்ச் பகுதியில் சர்வதேச எல்லையிலும், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியிலும் இந்தப் படைகள்நிறுத்தப்பட்டுள்ளன.
பாகிஸ்தான் ராணுவத்தின் எஸ்.எஸ்.ஜி. மோசஸ் எனப்படும் அந்தப் படைப் பிரிவு கிட்டத்தட்ட தீவிரவாத அமைப்புபோல செயல்பட்டு தாக்குதல் நடத்தும் ஒரு பிரிவாகும். இவர்கள் நிறுத்தப்பட்டுள்ளதை இந்திய ராணுவத்தின்உளவுப் பிரிவுகள் கண்டறிந்துள்ளன.
இங்கிருந்தவண்ணம் அல்-பாதர், லக்ஷர்-ஏ-தொய்பா ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த தீவிரவாதிகளின்உதவியுடன் எல்லையில் தாக்குதல் நடத்த இந்தப் படை திட்டமிட்டுள்ளது. இதற்காக எல்லை செயல் குழு என்றபுதிய பிரிவையும் இந்த சிறப்புப் படை உருவாக்கியுள்ளது என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் ராணுவத்தின் 10-வது பலூச் தரைப் படை மற்றும் 19-வது பலூச் விமானப் படை பிரிவுகளைச் சேர்ந்தவீரர்கள் அடங்கியது தான் இந்த மோசஸ் படை. இவர்கள் அமெரிக்க, பிரிட்டன் நாடுகளில் பயிற்சி பெற்றவர்கள்.
எதிர் நாட்டின் பாதுகாப்பு அமைப்புகள், ராணுவ முகாம்கள், தகவல்-தொடர்பு மையங்கள், கிடங்குகளை அழிக்கும்பயிற்சி பெற்றவர்கள். ஒவ்வொரு பிரிவிலும் 2,500 வீரர்கள் இருப்பர். 1971ம் ஆண்டு இந்தியாவுடன் நடந்தபோரின்போது இந்தப் பிரிவினர் ஜம்மூவில் பல தாக்குதல்களை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்தப் போரில் பாரமுல்லா, ரஜெளரி ஆகிய இடங்களில் விமானத் தாக்குதல்களையும் இப் படைகள் நடத்தின.பாகிஸ்தானின் வட பகுதியில் உள்ள அபோட்பாட் என்ற மலைப் பகுதியில் இப் பிரிவின் பயிற்சி மையம் உள்ளது.
எல்லையில் சண்டை தொடர்கிறது:
இந் நிலையில் எல்லைப் பகுதியில் இந்திய, பாகிஸ்தானிய வீரர்கள் கனரக துப்பாக்கிகளைக் கொண்டு தாக்குதல்நடத்தி வருகின்றனர்.
நேற்று ஆரம்பித்த இந்த மோதல் இரவு முழுவதும் நடந்தது.
இன்று காலையும் தொடர்ந்து சண்டை நடந்தவண்ணம் உள்ளது. முதலில் துப்பாக்கிச் சூட்டில் ஆரம்பித்த மோதல்பின்னர் கனரக மார்ட்டர் துப்பாக்கிச் சண்டையாக மாறியது.
இந்திய வீரர்கள் மீது 91 எம்.எம். ரக மார்ட்டர் துப்பாக்கிகளால் பாகிஸ்தான் வீரர்கள் சுட்டனர். இதையடுத்துஇந்திய வீரர்கள் 89 எம்.எம். ரக துப்பாக்கிகளால் சுட்டு வருகின்றனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications