கற்பழிப்பு முயற்சி: ஒட்டன்சத்திரத்தில் போலி சாமியார் கைது
ஒட்டன்சத்திரம்:
ஒட்டன்சத்திரத்தில் பெண்ணைக் கற்பழிக்க முயற்சித்த போலி சாமியார் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள லக்கியன்கோட்டையைச் சேர்ந்தவர் பொன்ராஜ் (45). ஒருநூற்பாலையில் வேலைபார்த்து வந்த இவர், கடந்த ஆறு மாதங்களுக்கு முன் திடீரென்று வேலையை உதறிவிட்டுசாமியார் ஆனார்.
அதே ஊரில் உள்ள ஒரு கோவில் முன் சிறிய குடிசை போட்டு குறி சொல்ல ஆரம்பித்துவிட்டார் பொன்ராஜ்.அவரிடம் குறி கேட்க நிறையப் பேர் வர ஆரம்பித்தனர். இதனால் அவருக்கு வசதி பெருகி, சொந்தமாகக் காரும்வாங்கிவிட்டார்.
இந்நிலையில் இரண்டு ஆண்டுகளாக மயக்க நிலையில் இருக்கும் ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த முத்துச்சாமி (45)என்பவரை அவருடைய மனைவி ஈஸ்வரி (38) கடந்த சில நாட்களுக்கு முன் பொன்ராஜிடம் அழைத்து வந்தார்.
அப்போது ஈஸ்வரியிடம் "நீங்கள் இனிமேல் இங்கு வரவேண்டாம். நானே அங்கு வந்து சிகிச்சை செய்கிறேன்"என்று பொன்ராஜ் கூறியுள்ளார்.
இதையடுத்து கடந்த மூன்று நாட்களுக்கு முன் முத்துச்சாமி வீட்டுக்கு வந்த பொன்ராஜ், அவருக்கு வைத்தியம்பார்த்தாராம். பின்னர் மறுநாள் மீண்டும் அங்கு சென்ற பொன்ராஜ், ஈஸ்வரியிடம் ஒரு காதல் கடிதத்தைக் கொடுத்துபடிக்கச் சொல்லியுள்ளார்.
இதைத் தொடர்ந்து, ஈஸ்வரியின் கையைப் பிடித்து இழுத்து அவரை மானபங்கப்படுத்த முயற்சித்தார் பொன்ராஜ்.இதை எதிர்பார்க்காத ஈஸ்வரி கூச்சல் போட்டார்.
சத்தத்தைக் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், பொன்ராஜைப் பிடித்து ஒட்டன்சத்திரம் போலீசாரிடம்ஒப்படைத்தனர். போலீசார் அவரைக் கைது செய்து, அவர் மீது இரு வழக்குகளைப் பதிவு செய்தனர்.
ஒட்டன்சத்திரத்தில் சித்த மருத்துவராக இருக்கும் ராஜ விருமான்டி என்பவர்தான் ஈஸ்வரியை சாமியாரிடம்செல்லும்படி கூறியுள்ளார். இதையடுத்து அவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
-
தமிழக நிதிநிலை கவலைக்கிடம்?.. கடன் வளர்ச்சி 14.3%.. வெள்ளை அறிக்கை தகவல் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
பழனி கோவில் பஞ்சாமிர்தம் விலையை உயர்த்த முடிவு? விஷ்வ ஹிந்து பரிஷத் எதிர்ப்பு -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது?












Click it and Unblock the Notifications