மதுரையில் ரூ.7.5 லட்சம் மதிப்பு கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரையில் ரூ.7.5 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 3 பேரைப் போதைப்பொருள் தடுப்பு போலீசார் கைது செய்துள்ளனர்.
மதுரையில் கஞ்சா கடத்தப்படுவதாக போலீசாருக்குத் தகவல் வந்தது. இதையடுத்து நேற்று (புதன்கிழமை) இரவுபோதைப் பொருள் தடுப்புத் துறையைச் சேர்ந்த போலீசார் சோதனை நடத்தினர்.
பெரியார் பஸ் நிலையம் அருகே ஒரு காரைச் சோதனை செய்தபோது, அதில் ஒன்பது மூட்டைகளில் கஞ்சாகடத்தப்படுவது தெரிய வந்தது.
சுமார் 150 கிலோ எடைகொண்ட இந்த கஞ்சாவின் மதிப்பு ரூ.7.5 லட்சமாகும்.
இதையடுத்து அந்தக் காரில் வந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் வந்த காரும் பறிமுதல்செய்யப்பட்டது.
விசாரணையில் ஆந்திராவிலிருந்து அவர்கள் கஞ்சா கடத்திக் கொண்டு வந்ததாகவும் அந்தக் காரின் நம்பர்பிளேட்டும் போலியானது என்றும் தெரிய வந்தது.












Click it and Unblock the Notifications