நாங்கள் தாக்கவில்லை: மீண்டும் மறுக்கிறது ஜெய்ஷ்-ஏ-முகம்மத்
காஷ்மீர்:
நாடாளுமன்றத்தின் மீது நாங்கள் தாக்குதல் நடத்தவில்லை என ஜெய்ஷ்-ஏ-முகம்மத் மறுத்துள்ளது.
காஷ்மீர் சட்டசபை மீது தாக்குதல் நடத்தி 40 பேரைக் கொன்ற இந்த அமைப்பு முதலில் அத் தாக்குதலுக்குப்பொறுப்பேற்றது. ஆனால், பாகிஸ்தான் அரசின் நிர்பந்தத்தை அடுத்து இத் தாக்குதலை நாங்கள் நடத்தவில்லை எனமறுத்தது.
இப்போதும் பாகிஸ்தான் யோசனைப்படி தான் இத் தாக்குதலை நாங்கள் நடத்தவில்லை என இந்த அமைப்புமறுப்பதாக இந்தியா கருதுகிறது.
காஷ்மீரிரைச் சேர்ந்த ஒரு உருது பத்திரிக்கைக்கு இந்த அமைப்பு அனுப்பியுள்ள அறிக்கையில்,
இந்திய நாடாளுமன்றத்தை நாங்கள் தாக்கவில்லை. ஆனால், விரைவில் மிகக் கடுமையான தாக்குதலைநடத்துவோம். பா.ஜ.க. ஆட்சியைவிட்டு விலகும் அளவுக்கு மிக மோசமான நிலையை உருவாக்குவோம்.
எங்கள் அமைப்பின் கமாண்டர் அபு ஹிராத் தலைமையில் நடந்த கூட்டத்தில் இம் முடிவு எடுக்கப்பட்டது. இந்தியாமுழுவதும் தாக்குதல் நடத்துவோம். தவறுகளை அரசு திருத்திக் கொள்ளாவிட்டால் வரலாற்று முக்கியத்துவம்வாய்ந்த தாக்குதல்கள் நடக்கும்.
ஜம்மூ-காஷ்மீர் முழுவதும் வரும் நாட்களில் தாக்குதல் தீவிரமாகும். எங்களிடம் மிக நவீன ஆயுதங்கள் உள்ளன.அவற்றைக் கொண்டு இந்திய ராணுவத்தினரைத் தாக்குவோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதில் அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் அபு ஹம்ஸாகையெழுத்திட்டுள்ளார்.
இந்தத் தீவிரவாத அமைப்பின் தலைவனான மெளலான மசூத் அஸார் பாகிஸ்தானில் வசித்து வருகிறான்.சுதந்திரமாக வலம் வரும் இவனை மதத் தலைவர் என்கிறது பாகிஸ்தான். ஆனால், இந்திய சிறையில் இருந்தஇவனை இந்திய விமானத்தைக் கடத்திச் சென்று விடுதலை செய்ய வைத்தது பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. என்பதுகுறிப்பிடத்தக்கது.
இவனை கைது செய்து இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என உள்துறை அமைச்சர் அத்வானி கோரியுள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications